நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்ப 1117 வைத்திய அதிகாரிகளை நியமிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக நிகழ்நிலையில் தயாரிக்கப்பட்ட பெயர்களின் பட்டியலை இன்று (17) (www.health.gov.lk) சுகாதார அமைச்சின் இணையதளத்தில் வெளியிட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் அந்த அதிகாரிகள் 20.10.2020 அன்று பணிபுரியடங்களுக்குச் சென்று கடமைகளை ஏற்க வுண்டும் என்றும் பதில் சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் சிறப்பு நிபுணர் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.