விளையாட்டுப் பாடசாலைகளின் கீழ் கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 12 பாடசாலைகளின் அபிவிருத்திகள் இவ்வருடத்தின் முதல் மாதங்களில் ஆரம்பிப்பதற்கு கிராமிய பாடசாலைகள் விளையாட்டு கீழ்கட்டுமான விருத்திகள் இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கேற்ப
1. திக்வல்ல விஜித வித்தியாலயம்
2. ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய வித்தியாலயம்
3. அனுராதபுர மத்திய வித்தியாலயம்
4. பொலன்னறுவ ரோயல் கல்லூரி
5. காலி சங்மித்த பாலிகா வித்திலாயலயம்
6. அம்பாறை டி.எஸ். சேனாநாயக்க மத்திய மகா வித்தியாலயம்
7. திருகோணமலை புனித ஜோஸப் வித்தியாலயம்
8. யாழ்ப்பாணம் மத்திய மகா வித்தியாலயம்
9. கம்பஹா ஹேனேகம மத்திய மகா வித்தியாலயம்
10. மொணராகல பெலவத்த நவோத்யா வித்தியாலயம்
11. மன்னார் முருகன் வித்தியாலயம்
12. ரத்மலான இந்து வித்தியாலயம்
ஆகிய பாடசாலைகள் இத்திட்டத்தின் கீழ் விருத்தி செய்யப்படவுள்ளன.
இலங்கை இராணுவத்தின் உதவியுடன் இந்தப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதற்கான 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன
இத்திட்டத்தின் கீழ், விளையாட்டு மைதான அபிவிருத்தி, விளையாட்டு மண்டப புனர்நிர்மானம், விடுதி ம்றறும் சுகாதார வசதிகளை மேம்படுத்தல் முதலான வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.