சர்வதேச அபிவிருத்திக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி (USAID) நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 120 பாடசாலைகளில் சுகாதார அறைகளை நிறுவ உதவுகிறது.
மாணவர்கள் நோய்வாய்ப்பட்டால் மாணவர்களை தனிமைப்படுத்தி பராமரிப்பதற்கு சுகாதார அறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கோவிட்19 தாக்கத்திற்கு அல்லது அதன் அறிகுறிகள் தென்படும் மாணவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
கோவிட்19 நிலமை முடிவடைந்த பின்னரும் இந்த சுகாதார அறைகளை தொடர்ந்தும் மாணவர்களின் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்த முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அந்த அறைகள் முதலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அனுராதபுரம், கண்டி, மொனராகல மற்றும் கம்பஹ மாவட்டங்களில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.