(-teachmore.lk)
சர்வதேச பெண் பிள்ளைகள் தினம் வருடாந்தம் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
இவ்வருடம் பலம் பெற்ற பெண் பிள்ளைகளை நிறுத்திவிட முடியாது என்ற தொனிப்பொருளில் இத்தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது.
உலகில் 18 வயதுக்குட்பட்ட 11 மில்லியன் பெண் பிள்ளைகள் இளவயதுத் திருமணம் செய்துகொள்கின்றனர். 130 மில்லியன் பெண் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை விட்டவிடுகின்றனர். மேலும் 15 மில்லியன் பெண் பிள்ளைகள் பாலியல் ரீதியான செயற்பாடுகளுக்கு தள்ளப்படுகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
1998 ஆம் வருட 50 இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை சட்டமூலத்தின் 14 ஏ பிரிவின் படி குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளுக்கு பிள்ளைகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எச்சரித்துள்ளது.