நாட்டிலுள்ள 373 தேசிய பாடசாலைகளில் 278பாடசாலைகளுக்கு இதுவரை அதிபர் நியமிக்கப்படவில்லை. இதன்படி குறித்த வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் நேற்றுமுன்தினம்(25) 153 பேருக்கு அதிபர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில்கல்வி இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எச்.என். சித்திரானந்த உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை இணைத்துக்கொள்வதற்காக கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்ட நேர்முக பரீட்சைகளுக்கு அமைவாக அரச சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவை குழு வழங்கிய அங்கீகாரத்திற்கு ஏற்ப 153அதிபர்களை இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒவ்வொரு தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு அமைவாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிபர்களுக்கு பாடசாலைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன