மேலும் 16000 பட்டதாரிகளை அரச சேவை பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த வாரம் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, இதன் அடிப்படையில் அரச சேவையில் ஒரு வருட பயிற்சிக்காக உள்ளீர்க்கப்பட்டு அதன் பின்னர் பொருத்தமான அரச திணைக்களங்களில் நிரந்தர தொழில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த 16000 பட்டதாரிகளுக்கு மேலதிகமாக அண்மையில் பயிற்சிக்காக உள்ளீர்க்கப்பட்ட 3725 பட்டதாரிகளை விரைவில் நிரந்தர அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.