ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு அமைய பட்டதாரிகள் 18000 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
54000 பட்டதாரி பயிலுனர் நியமனத்தின் ஒரு பகுதியாக 18000 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இம்முறை உள்வாரி, வெளிவாரி வேறுபாடுகள் இன்றி நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் திககொட கோமங்கொடயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார்.