2018 உயர் தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான உள்ளீர்ப்பு
நேர்முகத் தேர்வின் அடிப்படையிலான பதிவுகள் தொடர்பான அறிவுறுத்தல் கடிதங்கள் கல்வி அமைச்சின் தேசிய கல்வியியல் கல்லூரிகள் கிளையினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
2020.09.04 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உரிய நேர்முகப் பரீட்சையின் போது மேற்கொள்ளப்பட்ட தகைமைப் பரிசீலனையின் பிரகாரம் மேலே குறிப்பிடப்பட்ட பாடநெறிக்குத் தெரிவு செய்வதற்குரித்தான தகைமைகளை நிறைவு செய்துள்ளதாகவும், அதற்கிணங்க, நாட்டின் தற்போதைய நிலமையின் நிறைவின் பின், வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமையாவாக இணைக்கப்படவுள்ள தேசிய கல்வியியல் கல்லூரி மூலமாக பதிவினை மேற்கொள்வதற்கு அவசியமான விரிவான விளக்கங்கள் தரப்படவுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அறிவித்தல் மாத்திரமாக குறித்த கடிதத்தைக் கருதுமாறும், பாடநெறியின் அடுத்த கட்ட நடவடிக்கைககள் தொடர்பாக தேவையற்ற வண்ணம் அல்லது தொடர்ச்சியாக விசாரணை செய்வதைத் தவிர்த்துக் கொள்வதை சிறப்பானதாகக் கருதுவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பூரணப்படுத்தி மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய படிவம் ஒன்றையும் அக்கடிதம் கொண்டுள்ளது