புலமைத்திருட்டு – ஓர் ஒழுக்கவியல் பார்வை

Teachmore
புலமைத்திருட்டு – ஓர் ஒழுக்கவியல் பார்வை
Plagiarism – A Moral View
R.Eeswaran
Department of Philosophy
University of Jaffna
________________________________________
புலமைத்திருட்டை சமகால கல்வியலில் சார்ந்த தொற்றுநோயாக சிலர் அடையாளப்படுத்துவர். இது கல்வியலுக்கே விடப்பட்டுள்ள மிகப்பெரியவோர் சாபக்கேடாக விளங்குகின்றது. அத்துடன் புலமைத் திருட்டினைத் தடுப்பதும் அதனைக் கண்டறிவதும்  கல்வியலில் அல்லது கல்வியலுக்கான பெரும் சவாலாகவூம் இருக்கின்றது. இது குறித்த பல்வேறுபட்ட வழக்குகளானது காலகாலமாக நடைபெற்றுவருகின்ற போதிலும் இத்திருட்டினை தடுப்பதற்கான ஓர் முறையான செயல்த்திட்டம் பூரணமாக வெற்றியளிக்கவில்லை என்றேதான் கூறமுடியும். ஏனெனில் புலமைத்திருட்டின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தகவல் தொடர்பு உட்கட்டமைப்பு மற்றும் இணைய மேம்பாடு காரணமாக புலமைத் திருட்டுக்கள் அதிகரித்துள்ளது. இணைய வழி திருட்டுக்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒன்லைன் புலமைத் திருட்டு இணைய வசதிகளின் மேம்பாட்டினால் அதிகரித்துள்ளது.

கல்விப் புலத்தில் மாணவர்களினால் அல்லது புலமையாளர்களினால் மேற்கொள்ளப்படும் புலமைத் திருட்டு என்பது பாரியகுற்றமாகவும் ஒழுக்கத்துக்கு முரணான செயல்பாடாகவும் நோக்கப்படுகின்றது.  குறிப்பாக அரிஸ்ரோட்டிலுடைய நற்பண்புக் கோட்பாடு, இமானுவேல் காண்டினுடைய கடமைக் கோட்பாடுகள், தங்கவிதிகள் போன்றன புலமைத் திருட்டினை பகுத்தறிவுக்கு முரணான செயற்பாடுகளில் ஒன்றாக குறிப்பிடுவதுடன் நாகரீகம் அற்ற ஒருவரின் செயற்பாடாகவும் சுட்டிநிற்கின்றன.

புலமைத்திருட்டு என்பதை Iyela(2002) பொதுவாக வரையறுக்கும் போது அது ஒரு நேர்மையற்ற செயற்பாடாகவும், மற்றவர்களின் அறிவினை தன்னுடைய அறிவாகப் பிரதிசெய்கின்ற ஒன்றாகவும் சமூக ஒழுக்கத்திற்கும், தனிமனித ஒழுக்கத்திற்கும் முரணானவொரு செயற்பாடாகவும் வரையறுக்கின்றார்.

பொதுமொழியில் புலமைத்திருட்டினை ஆராயப்புகின் ஓர் படைப்பினை/ ஆக்கத்தினை/ அறிக்கையினை அந்த ஆசிரியரின் ஒப்புதல் இன்றி அவருடைய கருத்தினை பிரதிசெய்வதையோ அல்லது வெளியிடுவதையோ  புலமைத்திருட்டு குறித்து நிற்கின்றது. இன்னொரு வகையில் கூறுவதாயின், மற்றொருவரின் மொழிகள், சிந்தனைகள், சொற்கள் என்பவற்றை நெருக்கமான போலித்தோற்றத்துடன் அல்லது அதனை தன்னுடைய சொந்தப்படைப்பாக கருதுவதே புலமைத்திருட்டாகும்;.
.
வரைவிலக்கணங்கள்
Harris(2004) என்பாரின் கருத்துப்படி, புலமைத்திருட்டு (சில வேளைகளில் கருத்துத்திருட்டு எனவும் அழைக்கபப்டும்) என்பது மற்றைய நபர்களுடைய எண்ணங்களையோ, சிந்தனைகளையோ, சொற்களையோ அவரின் அனுமதி இன்றி பயன்படுத்துவதையோ அல்லது அதனை சொந்தப்படைப்பாக கருதுவதையோ கருத்துத்திருட்டு என வரையறுக்கின்றார். எழுத்துக்களில் பேச்சாளர் அல்லது எழுத்தாளர் மேற்கோள் குறியினைப் பயன்படுத்துவதன் மூலம் மூலத்தை வெயிப்படுத்துகின்றனர்.

Simpson(2002) என்பவருடைய கருத்துப்படி,கருத்துத்திருட்டு என்பது ஆசிரியருடைய எண்ணங்கள், எழுத்துக்கள், கண்டுபிடிப்புக்கள், (இலக்கியம், கலை, இசை) வெளியீடுகள், வெளிப்பாடுகள், ஒதுக்கீடுகள் போன்றவற்றின் தவறான ஊடுருவலே கருத்துத் திருட்டு என்கின்றார். அதாவது ஆசிரியரின் சொந்த எழுத்துக்கள், வெளியீடுகள், சிந்தனைகள் என்பதை அவருடைய ஒப்புதல் இன்றி பயன்படுத்துவதையோ அல்லது வெளியிடுவதையோ கருத்துத்திருட்டு என்கின்றார்.
Oxford ஆங்கில அகராதி கருத்துத்திருட்டு என்பதை மற்றைய நபர்களுடைய எண்ணங்கள், சொற்கள், எழுத்துக்கள், படைப்புக்கள் அல்லது பாசாங்குகள் போன்றவற்றை பிரதி செய்வது அல்லது அவற்றினை உங்களுடையதாக சொந்தமாக்கிக் கொள்வது வரையறுக்கின்றது. அச்சுப்பொருட்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள், இசைகள் மற்றும் இதுபோன்ற பதிப்புரிமைப்பொருட்களில் கூட கருத்துத்திருட்டு இடம்பெறுகின்றது.

கருத்துத்திருட்டு குறித்த வழக்குகள், காலகாலமாக நடைபெற்று வருகின்ற போதிலும் இப்போது அவை அதிகரித்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் தகவல் தொடர்பு உட்கட்டமைப்பு மற்றும் இணைய மேம்பாடு காரணமாக கருத்துத் திருட்டுக்கள் அதிகரித்துள்ளன. இணைய வழி திருட்டுக்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஒன்லைன் கருத்துத் திருட்டு இணைய வசதிகளின் மேம்பாட்டினால் அதிகரித்துள்ளன. கருத்துத்திருட்டு என்பது அப்படியே உரையை நகல் எடுப்பது மட்டுமல்ல: மாறாக அக்கருத்தை வெளியிட குறிப்பிட்ட வார்த்தைகள் அல்லது கட்டமைப்புக்களைப் பயன்படுத்தியதோடு மற்றொருவரின் கருத்தினை தன்னுடைய சொந்தக்கருத்தாக வெளியிடுவதினையும் குறிக்கும்.
உலக நாடுகள் இக்கருத்துத்திருட்டினை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இங்கிலாந்து பல்கலைக்கழக கல்விக் கொள்கைகளில் கருத்துத்திருட்டினை வரையறுக்கவில்லை அல்லது மாநில நடைமுறைகளினைக் கையாளுகின்றனர். இருப்பினும் 2000ஆண்டுகளுக்குப் பின்னர், மாணவர்கள் கருத்துத்திருட்டினைச் செய்வதிலிருந்து தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் பற்றி ஆராய்ந்ததோடு அவை வளர்ச்சியடைந்து வந்துள்ளன. பிரச்சினைகள், சிக்கல் தன்மைகள் என்பன இரண்டும் அதிகரித்து  கருத்துத்திருட்டின் அளவூம், நோக்கமும் மேலும் அதிகரித்துள்ளன.

ஒன்றிணைந்த தகவல் குழுவின் கருத்துப்படி (JISC)கருத்துத் திருட்டினைத் தடுப்பதும் அதனைக் கண்டறிவதும் கல்வியலில் அல்லது கல்வியலுக்கான பெரும் சவாலாக இருக்கின்றது. பேராசிரியர்கள் மற்றும் ஆராட்சியாளர்கள் புலமைத் திருட்டில் ஈடுபடும்போது தற்காலிக நீக்கம் முதல் தண்டனைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். அத்தோடு அவர்கள் மீதுள்ள நம்பிக்கையூம், நற்பண்புகள் இழந்து விடுவிகின்றது.

கல்விப்புலத்தில் மாணவர்களினால் செய்யப்படும் புலமைத்திருட்டு என்பது பாரிய குற்றமாகும். தொடர்ச்சியாக செய்யப்படும் கருத்துத்திருட்டு அல்லது ஒரு மாணவன் ஏதாவது ஒரு புலமைத்திருட்டினை செய்யூம் போது எல்லாம் (உதாரணமாக வேறு ஒருவரின் ஆராய்ச்சி அறிக்கையினை தனது அறிக்கையாக சமர்பித்தல்) மாணவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

வரலாற்று ரீதியான பின்னணி
Thomas mallon(2001) புலமைத்திருட்டு வாதத்தின் பழமையான ஆசிரியர்களுள் ஒருவராவார். பண்டைய மற்றும் மத்தியகால ஐரோப்பாவில் பல அதிகாரம் அல்லது அங்கீகாரம் பெற்ற சமய இலக்கியங்கள் மற்றும் மரபுகள் காணப்பட்டன. நல்ல பிரசுரங்கள் பின்னர் போலியானதாகவும், நகலாகவும் அறியப்பட்டது. மதிப்புக்குரிய ஆசிரியர்களின் படைப்புக்களாக கருதப்பட்டாலும் பின்னர், அவை போலித்தன்மை கொண்ட பிரதிகளாக இனங்காணப்பட்டன. malon என்பவருடைய கருத்துப்படி, 1600 களில் நடுப்பகுதிகளில் கருத்துத்திருட்டுக்களில் குற்றச்செயல்கள் மற்றும் திருட்டுத்தனமாக சிந்தனைகள் ஆகிய ஒவ்வொன்றிலும் அறிவியல் உட்பட படைப்பாக்கல் துறைகள் பொதுவாக செல்வாக்குச் செலுத்தியது.
புலமைத்திருட்டு என்ற சொல்லானது முதல் முதலில் சேக்பியர் (Shakespeare) மற்றும் அவருடைய சகாக்களின் பல்வேறு கருத்துப் போராட்டங்களில் தோன்றியது. Ben Johnson முதல்முதலில் இச்சொல்லினை அச்சில் பயன்படுத்தினார். அவர் அதற்கு வழங்கிய வடிவம் Plagiary என்பதாகும். இது இலத்தீன் மொழியில் ஒருவகையான கடத்தல்காரன் அல்லது சட்டவிரோத செயலாற்றுபவர்களினைக் குறிக்கின்றது.  ஆங்கிலத்தில் Plagiarism என அழைக்கப்படும் சொல்லானது இலத்தீன் சொல்லான பிளேகியாரி என்பதில் இருந்து வந்ததாகும். இதன் அர்த்தம் கடத்தல்காரர் என்பதாகும்.

கருத்து திருட்டுக்கு எதிராக பதிப்புரிமையைப் பாதுகாத்துக்கொள்வதற்காக முதல் ஆங்கில் பதிப்புரிமை சட்டம் 1709 இல் நிறைவேற்றப்பட்டது. இது புத்தகத் திருட்டுக்கு எதிராகவூம், வெளியீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவூம் நிறைவேற்றப்பட்டது. சட்டத்தரணியூம் சுயசரிதையாளருமான Samuel Johnsons பதிப்புரிமை குறித்த முக்கியமான வழக்கொன்றில் வாதிக்கும் போது எழுத்தாளர்களுக்கும் அவருடைய வாரிசுகளுக்கும் எவ்வளவு காலம் பதிப்புரிமை காப்பு வழங்கப்படவேண்டும்  என வாதித்தார்.
புலமைத்திருட்டில் மாணவர்கள் ஈடுபடுவதற்கான காரணங்கள்.
Morgen(2005) கருத்துப்படி தான் அவதானித்த சில மாணவர்கள் புலமைத்திருட்டு நேர்மையற்ற அல்லது ஒழுக்கத்திற்கெதிரான அல்லது குற்றச் செயலாக இருப்பதையூம் தெரிந்தும் கூட புலமைத்திருட்டில் ஈடுபடுகின்றார்கள் என்பதையூம் மற்றைய சிலர் உண்மையில் இது குற்றமான அல்லது நேர்மைற்ற/ ஒழுக்கமற்ற செயலாகக் கருதாமல் இச்செயற்பாட்டில் ஈடுபடுகின்றார்கள் என அவதானப் பரிசோதனையின் மூலம் கண்டுகொண்டார் . அதாவது அவர்கள அறியாமையினால் அவ்வாறான செயலினைச் செய்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் தம்முடைய மதிப்பீடு பற்றி எதிர்மறையான மனப்பாங்கினை கொண்டிருக்கிறார்கள். மதிப்பீடு பற்றி எதிர்மறையான மனப்பான்மையை நோக்கி செல்கின்றார்கள்.
புலமை திருட்டினை இனங்காண்பது எவ்வாறு?
1. உசாத்துணைகள் குறிப்பிடாதவை, ஆதாரமற்ற சான்றுகள், உறுதிப்படுத்தப்படாத கூற்றுக்கள் ஆராட்ச்சி அறிக்கைகள் என்பன புலமை திருட்டினை இனங்காட்டுகின்றன.

2. குறிப்புக்களின் மேற்கோள் காட்டப்பட்டால் உண்மையான உசாத்துணை பாங்கினை இனங்காண்பது கடினமானது.
3. தெளிவற்ற உசாத்துணைகள் புலமை திருட்டுக்கு சான்றாகும்
4. புலமை திருட்டு பிரதி / நகல் வடிவத்தில் இருக்கும் போது சில எழுத்துக்கள் பிரதியின் இறுதிப்பகுதியில் நகல் எடுக்கப்படலாம் / பிரதி பண்ணப்படலாம் . உதாரணம் ; சில புலமை திருட்டுக்கள் மற்றவருடைய விடயத்தில் அல்லது பிரிவூடன் ஒத்து போகவில்லை .
5. சில புலமை திருட்டுக்கள் மற்றவர்களுடைய விடயத்துடன் ஒத்துப் போகவில்லை என்று கருதுதல் தவறு ஏனெனில் தவறான முறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
ஒரே பிரபலமான ஆதாரத்திலிருந்து பல மாணவா;கள் அதே பகுதியில் நகல் எடுத்திருப்பதை / பிரதி செய்திருப்பதை அறிந்திருப்பதை தெரிந்து கொள்வதன் மூலம் புலமைத் திருட்டினை அறிந்து கொள்ளலாம். ஒரு எழுத்தாளர் ஆதாரத்தை எப்படி மாற்றிச் சொல்வது அல்லது பயன்படுத்துவது என்பதில் தவறு விட்டு இருக்கலாம். அதற்கான மூலத்தை ஆராய்ந்து இந்தப் பிழைகளை கண்டுபிடித்துக்கொள்ளலாம். அதன் மூலம் புலமைத்திருட்டினை இனங்கானலாம்.
எழுத்தாளர்கள் பொதுவாக கையிலிருக்கும் பணிக்கு நேரடித்தொடர்புடைய முந்தைய பணிகளை மட்டுமே வெளியிடுவார்கள். மூலகங்களின் மற்றய பகுதிகள் ஒத்துப்போவது போல் இருக்கும் அல்லது தனது படைப்பின் பிந்திய சேர்ப்புக்களாக மற்றும் பொது குறிப்புக்களிற்கு ஒத்ததாக இருக்கும்
ஆராய்சிக்கு பொருத்தமற்ற அல்லது பரிந்துரைக்கப்படாத ஆதாரங்களை மாணவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது தவறான தகவல்கள் உள்ளடக்கியிருக்கலாம்.

சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கை ஒன்லைனில் திருடப்பட்டதாக இருக்கலாம். அல்லது நகல் எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.  ஆகவே முதலில்  ஒன்லைன் கருத்துத்திருட்டினை கண்டறியும் நிபுணரிடம் கொடுத்துக் அதை கண்டறிதல்.
நவீன தானியங்கும் அடைவு முறைகள் பரவலாகி வருவதால் படைப்புக்களுக்கு இடையே உள்ள குறிப்புக்கள் படைப்புக்களின் அதிகார தன்மைகள் மதிப்புமிக்க தகவலை வழங்குவதோடு படைப்புக்கள் எவ்வளவு ஒற்றுமையாக உள்ளன என்பதை காட்டுகின்றன. இது ஒரே மாதிரியான படைப்புக்களை கண்டு பிடிக்க உதவூம்.
புலமைத்திருட்டை கண்டுபிடிக்க உதவ இலவச ஆன்லைன் கருவிகள் கிடைக்கின்றன. காப்புரிமை மீறல் உள்ளிட்ட புலமைத்திருட்டு ஏற்படுகையில் படைப்புக்கான உரிமம் கொண்ட உரிமையாளர்கள் அத்துமீறிய தள உரிமையாளர்களுக்கும், தளத்திற்கும் எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்கலாம்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!