2020ம் ஆண்டுக்குத் தேவையான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி நூல் வெளியீட்டு ஆணையாளர் திருமதி பத்மினி நாலிகா வெலிவத்த தெரிவித்;துள்ளார்.
430 வகையான புதிய புத்தகங்கள் இம்முறை அச்சிடப்பட உள்ளன.
அச்சிடப்படும் பாடப்புத்தகங்களின் எண்ணிக்கை 42 மில்லியன் ஆகும்.
அடுத்த வருடத்தில் தரம் ஐந்திற்குத் தேவையான அனைத்துப் பாடப்புத்தகங்களும் புதிதாக அச்சிடப்பட உள்ளன.
அதனுடன் அடுத்த வருடமளவில் புதிய கற்கை நெறி சிபார்சின் அடிப்படையில் அச்சிடப்பட உள்ள புதிய நூல்கள் தொடர்பிலும் விடயங்கள் பூர்த்தி செய்யப்படுமென்று கல்வி நூல் வெளியீட்டு ஆணையாளர் திருமதி பத்மினி நாலிகா வெலிவத்த மேலும் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டில் இருந்து புதிய விடய சிபார்சுகளின் அடிப்படையில் புதிய புத்தகங்கள் அச்சிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன் இதற்கென ஒவ்வொரு வகுப்பிற்கும் புதிய அச்சிடும் நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டர். (GID)