01. உலக வங்கி அமைப்பினால் நிதியுதவி வழங்கப்படும் அடையாளங் காணப்பட்ட முதலீட்டுத் திட்டத்தில் நிலையற்ற அவசர தேவை பின்னூட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை , COVID 19 தொற்று நிலைமையின் காரணமாக முக்கியத்துவ அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டத்திற்கு பயன்படுத்துதல்
COVID 19 தொற்று நிலைமையின் காரணமாக சுகாதார துறைக்கு அப்பால் பல்வேறு அழுத்தங்களை நாடு எதிர்கொண்டிருப்பதினால் விவசாயத்துறையை மேம்படுத்துதல், கல்வி முறையை நடைமுறைப்படுத்துதல், வீட்டிலிருந்து கடமைகளை மேற்கொள்ளும் நடைமுறையொன்றை அமைத்தல், இடர்முகாமைத்துவம் மற்றும் பொது சேவைகளை பயன்படுத்தும் பொழுது நோய் பரவுவதை தடுத்தல் போன்ற விடயங்களுக்கு துரிதமாக ஒத்துழைப்பை வழங்குவதற்காக நிதி ஒத்தழைப்பை வழங்கும் தேவை அடையாளங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக உலக வங்கி அமைப்பினால் வழங்கப்படும் 4 நிதி முதலீட்டுத் திட்டங்கள் அவசர பின்னூட்ட தகவல் தொழில்நுட்பத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள 56 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியத்தில் மேலே குறிப்பிடப்பட்ட துறைகளில் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டத்திற்கு பயன்படுத்தக் கூடிய வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. மனிதவள அபிவிருத்தி புலமைபரிசிலுக்கான ஜப்பான் நிதியுதவி வேலைத்திட்டம் – 2020
அரச துறையைச் சேர்ந்த நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் முதுகலை பட்ட Postgraduate degree கற்கைநெறியை தொடர்வதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்பதற்காக 2010ஆம் ஆண்டு தொடக்கம் மனிதவள அபிவிருத்தி புலமைபரிசிலுக்கான ஜப்பான் நிதியுதவி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதன் கீழ் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடக்கம் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு வசதிகளை செய்துகொடுப்பதற்காக ஜப்பான் அரசாங்கத்தினால் 269 மில்லியன் ஜப்பான் யென்களை (சுமார் 457 மில்லியன் ரூபா); ) நன்கொடையை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த நன்கொடையை பெற்றுக் கொள்வதற்கும் , அது தொடர்பிலான உடன்படிக்கையை கைச்சாதிடுவதற்கும் அமைவாக நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. தேசிய லொத்தர் சபையினால் முன்னெடுக்கப்படும் ‘தரு திரி சம்பத்த’ என்ற புதிய அதிஷ்டலாப சீட்டை அச்சிட்டு விநியோகிப்பதற்காக அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள அச்சிடும் ஒப்பந்தத்தின் கால எல்லையை நீடித்தல்
‘தருவான் சுரக்கிமு’ சிறுவர்களை பாதுகாப்போம் என்ற தேசிய அறக்கட்டளையை வலுவூட்டுவதற்காக தேசிய லொத்தர் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘தரு திரிய சம்பத்த’ என்ற அதிஷ்டலாப சீட்டை அச்சிடுவதற்காக அரச அச்சக கூட்டுத்தாபனத்திடம் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்த கால எல்லை 2020.05.12 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த காலப்பகுதிக்குப் பின்னர் பொருத்தமான அச்சக உரிமையளர் ஒருவரை தெரிவுசெய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள பெறுகை செயற்பாடு கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக இதுவரையில் பூர்த்தி செய்வதற்கு முடியாதுள்ளது. இதனால் இந்த அதிஷ்ட இலாப சீட்டை அச்சிடுவதற்கான நடவடிக்கைகளை , அரச அச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு அமைவாக முன்னர் உடன்பட்ட விவரக்குறிப்புகள் மற்றும் விலைக்குட்பட்ட வகையில் 2020 .05.13 திகதி தொடக்கம் 2020.11.12 திகதி வரையில் அதாவது 6 மாத காலத்திற்காக தொடர்ந்தும் அரச அச்சு கூட்டுத்தாபனத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்வதற்காக நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. COVID 19 தொற்றை தடுக்கும் நடவடிக்கைக்காக தேவையான வைத்திய உபகரணங்களை விநியோகிப்பதற்காக 800 மில்லியன் ஜப்பான் யென்களுக்கான திட்டமல்லாத ஜப்பான் வழங்கும் மானிய உதவி
இலங்கையில் COVID 19 தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை வலுவூட்டுவதற்குத் தேவையான வைத்திய உபகரணங்களை விநியோகிப்பதற்காக 800 மில்லியன் ஜப்பான் யென்களை (1360 மில்லியன் ரூபா) திட்டமில்லாத ஜப்பானின் மானிய நிதி உதவி என்ற ரீதியில் நிதியுதவியை வழங்குவதற்கு ஜப்பான் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதன்கீழ் MRI Scanner , CT Scanner , Bedside X-Ray systems, Central Monitors , Bedside Monitors ,Defibrillators போன்ற வைத்திய உபகரணங்களை விநியோகிக்கக்கூடியதாக இருக்கும். இதற்கமைவாக இதற்கான மானிய உதவியை பெற்றுக்கொள்வதற்காகவும் அது தொடர்பிலான உடன்படிக்கையில் கைச்சாதிடுவதற்காகவும் நிதி , பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர்; அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. வரையறுக்கப்பட்ட இலங்கை திரிபோஷா நிறுவனத்திற்கு 2020 ஃ2021 காலப்பகுதியில் திரிபோஷா உற்பத்திக்காக முழுமையான பால்மாவை விநியோகிப்பதற்கான பெறுகை
உள்ளுர் பசும்பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை வலுவூட்டும் நோக்கில் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆண்டு வரையில் திரிபோஷாவை தயாரிப்பிற்கு தேவையான பால்மாவை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையின் அனுமதியுடன் வரையறுக்கப்பட்ட மில்கோ (தனியார்) நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக வரையறுக்கப்பட்ட இலங்கை திரிபோஷா நிறுவனத்திடம் 2020/2021 வருடங்களுக்காக திரிபோஷா தயாரிப்புக்கு தேவையான 720 மெற்றிக் தொன் முழுமையான பால்மாவை விநியோகிப்பதற்கான பெறுகை தொடர்பாக சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை கவனத்தில் கொண்டு அதன் பால்மா அளவை வரையறுக்கப்பட்ட மில்கோ (தனியார் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. தேயிலை ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டுள்ள தேயிலை மேம்பாட்டு மற்றும் விற்பனை வரியை தற்காலிகமாக இடைநிறுத்துதல்
தற்பொழுது நாட்டில் நிலவும் கொவிட் 19 தொற்று நிலைமைக்கு மத்தியில் தேயிலை தொழிற்துறை எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில் தேயிலை தொழிற்சாலைகளை முன்னெடுக்கும் பணியை தொடர்ந்தம் மேற்கொள்ளுதல், பெருமளவில் தேயிலையை இறக்குமதி செய்யும் பெரும்பாலான நாடுகளின் கொள்வனவு ஆற்றல் குறைதல் விநியோக முகாமைத்துவத்தில் பிரச்சினை மற்றும் உற்பத்தி தரத்தை நிலையானதாக முன்னெடுத்தல் ஆகியன முக்கியமானதாகும். இதில் சிரமங்களுக்கு மத்தியிலும் தேயிலை தொழிற்துறையை நிலையானதாக முன்னெடுப்பதற்காக நிதி நிவாரணமாக, ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து தேயிலை கிலோகிராம் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களிடம் தற்பொழுது அறவிடப்படும் ரூபா 3.50 தேயிலை மேம்பாடு மற்றும் விற்பனை வரி அறவிடுவதை 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பெருந்தோட்ட மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. கொழும்பு துறைமுக நகரத்தில் வெக் போர்ட் சிட்டி கழம்பு (தனியார்) நிறுவனத்தின் மூலம் உத்தேச முதலீட்டுக்கு மூலோபாய அபிவிருத்தி திட்ட தர நிலையை வழங்குதல் மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குதல்
கொழும்பு துறைமுக நகர திட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்காக இலங்கை அரசாங்கம் நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்நாட்டில் இணைக்கப்பட்ட CHEC Port City Colombo (தனியார் ) நிறுவனத்துடன் முத்தரப்பு உடன்படிக்கை 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கைச்சாத்திடப்பட்டதுடன் இதற்கமைவாக இந்த திட்டத்தின் கீழ் 440 ஹெக்டர் காணியை முழுமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட உடன்படிக்கையின் விதிகளுக்கு அமைய காணியில் 116 ஹெக்டர் திட்டத்துடனான CHEC போர்ட் சிட்டி கொழும்பு (தனியார்) நிறுவனத்திடம் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட |வேண்டும். இதற்கமைவாக அவ்வாறு வட்டி அடிப்படையில் வழங்கப்படவுள்ள காணியில் 6.8 ஹெக்டரில் 5 கோபுரங்களைக் கொண்ட கலப்பு அபிவிருத்தி திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை அந்த நிறுவனத்தினால் இலங்கை முதலீட்டு சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடனான இந்த திட்டத்தில் முதலாவது கட்டம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இரண்டாவது கட்டம் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. திட்டத்தின் தகவல் தொழில்நுட்ப மூலோபாய முக்கியத்துவம் மற்றும் பாரிய அளவு தொடர்பில் கவனத்தில் கொண்டு 2008ஆம் ஆண்டு இலக்கம் 14 இன் கீழான மூலோபாய அபிவிருத்தி திட்ட( திருத்தப்பட்ட) சட்டத்தின் மற்றும் 1978ஆம் ஆண்டு இலக்கம் 4இன் கீழான இலங்கை முதலீட்டு சபை ( திருத்தப்பட்ட ) சட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய ஒரு முதலீட்டுக்காக சம்பந்தப்பட்ட ஊக்குவிப்பை வழங்கக்கூடிய வகையில் மூலோபாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்காக கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.