கட்டுரை: பரிகாரக் கற்பித்தல் முறை

 

Teachmore


கட்டுரை: பரிகாரக் கற்பித்தல் முறை

கலாநிதி தேவராசா முகுந்தன்

1. அறிமுகம்


பூமியில் மனிதன் தோன்றிய காலப்பகுதியில் இருந்தே கற்றல்-கற்பித்தல் முறை தோன்றியிருக்கின்றது. மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகள் கூட கற்றல் கற்பித்தல் முறையைப் பயன்படுத்தியிருப்பதாக பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன (டீசழறnஇ 1994).கற்றல் கற்பித்தல் முறையானது வினைத்திறன் மிக்கதாகக் காணப்பட்டால் பி;ள்ளையானது தன்னைச் சூழவுள்ள உலகை நன்கு பயன்படுத்த முடியும். மற்றவர்களுடன் சுமுகமாக ஒன்றிணைந்து வாழும் கலையை குழந்தை கற்காவிடின் அக்குழந்தை தனது வாழ்வில் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திக்க நேரிடும்.

கற்பித்தலின் மூலாதாரம் ஆசிரியருக்கும் கற்போனுக்குமிடையேயான இடைத்தொடர்பாகும்

பிரச்சினை தீர்த்தல் முறை செயற்றிட்ட முறை , மொண்டிசூரி முறை சிறுவர் பூங்கா முறை , அவதானித்தல் , விரிவுரை முறை போன்ற கற்றல்-கற்பித்தல் முறைகள் பிரபலமான முறைகளாக விளங்குகின்றன. எனினும் இவற்றையும் விட பல்தரக் கற்பித்தல்), பல்மட்டக் கற்பித்தல .பரிகாரக் கற்பித்தல் . போன்ற விசேட கற்றல்-கற்பித்தல் முறைகளும் காணப்படுகின்றன. இவை விசேட சந்தர்ப்பங்களிலும் விசேட தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுபவை ஆகும்.

இக்கட்டுரையின் பிரதான நோக்கம் பின்வருவனவற்றை ஆராய்தலாகும்:
• பரிகாரக் கற்பித்தல் முறை என்றால் என்ன
• பரிகாரக் கற்பித்தல் முறையின் பண்புகள்
• பரிகாரக் கற்பித்தலுக்குரிய செயலொழுங்கு,
• பரிகாரக் கற்பித்தலுக்குரிய செயலொழுங்கில்; இனங்காணக்கூடிய காரணிகள்

2. பரிகாரக் கற்பித்தல் முறை என்ன?

மெல்லக் கற்கும் மாணவர்கள் தமது பாட அலகுகளில் இழந்தவற்றை கற்பதற்கு உதவும் செயற்பாடானது பரிகாரக் கற்பித்தல்முறை எனப் பொதுவாகக் குறிப்பிட முடியும்.

மாணவர்கள் சுகவீனம், போர், இடப்பெயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் தமது கற்றல் நடவடிக்கைகளில் ஒழுங்காகவும் தொடர்ச்சியாகவும் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகிறது. இவர்கள் தமது வகுப்புக்குரிய கலைத்திட்டத்தில் உள்ள விடயங்களில் இடையிடையே சில விடயங்களை இழக்கின்றனர். இவ்வாறு இடையில் இழக்கப்படும் விடயங்கள் தொடர்ச்சியாக இவர்கள் கற்கப் போகும் விடயங்களுக்கு அவசியமானவையாக இருக்கலாம். இதனால் இம்மாணவர்கள் தமது தொடர்ச்சியான கற்றலில் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.
ஆரம்ப வகுப்பில் மொழிப் பாடத்தில் வாசிப்பதற்கு பிள்ளைககுக்கு கற்பிக்கும் தருணத்தில் பாடசாலைக்கு சமூகமளிக்காத பிள்ளை, தொடர்நது மொழிப் பாடத்தை மட்டுமல்லாது சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள், சமயம், கணிதம் போன்ற பாடங்களைக் கற்பதிலும் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றது. இவ்வாறே ஆரம்ப வகுப்பில் கணித பாடத்தில் எண்களைக் (குறியீடு;, எண்பெயர், எண் பருமன்) கற்பிக்கும் போது பாடசாலைக்குச் செல்லாத பிள்ளையால் அதன் பின்னர் கற்பிக்கப்படும் கணிதச் செய்கைகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பவற்றை பரிந்து கொள்ள முடியாதிருக்கும். இதனைப் போலவே மற்றைய பாடங்களிலும் பிள்ளைகள் பல்வேறு முக்கிய விடயங்களை இழந்து தொடர்ச்சியான கற்றலில் ஈடுபட முடியாது சிரமப்படுவர்.

மாணவர்களுக்கு தமது கற்றலில் உள்ள இடர்பாடுகளைக் களைந்து தொடர்ச்சியான கற்றலில் ஈடுபடுவதற்கு துணை செய்யும் பரிகாரக் கற்பித்தலானது உள்ளடக்கத்தை விடவும் திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. பரிகாரக் கற்பித்தல் சிறார்களின் பார்வைக் குறைபாடு, புலக்காட்சி ஒழுங்கமைப்பு, அரூப காரணம் காட்டுதல், ஒலியை இனங்காணல், கணிதச் செயற்பாடுகள், கவனக் குறைவு, முதல் எழுத்தைக் கொண்டு வாசித்தல், செவிப்புலக் குறைபாடு போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

பரிகாரக் கற்பித்தல் தேவைப்படும் மாணவர்கள் பெரும்பாலும் சராசரி மட்டத்திலும் குறைவானவர்களாகவே காணப்படுவர்.. இதற்கான காரணமாக அமைவது குறித்த கற்றல்சார் அல்லது நடத்தைசார் பிரச்சினைகள்/இடர்ப்பாடுகள் ஆகும். புரிகாரக் கற்பித்தலை கல்வியில் சராசரி மட்டத்திலும் கூடிய மட்டத்தில் உள்ள மாணவர்களுக்கும் மேற்கொள்ள முடியும். இந்த மாணவர்கள் மேலதிகக் கவனிப்புடன் கற்றலில் ஈடுபடுவார்கள்.

3. பரிகாரக் கற்பித்தலின் பண்புகள்
பரிகாரக் கற்பித்தலானது பல்வேறு பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இது பணியாற்றுவதுடன் தொடர்புபடுகின்றது. இது அவதானித்தல், நிர்ணயித்தல், பரிகாரம் செய்தல், மதிப்பிடுதல் போன்ற அம்சங்களில் முறைமையாக பணியாற்றுவதுடன் தொடர்புபடுகின்றது. பரிகாரக் கற்பித்தலானது மாணவர்களுடன் நோக்கம் கருதி கருத்துடன் பணியாற்றுவதுடன் தொடர்புபடுகின்றது.

மாணவர்கள் குழு வேலைகளில் அல்லது தனி வேலைகளில் ஈடுபட்டிருக்கும் வேளைகளில் அவர்களின் வேலைகளை அவதானித்தலின் மூலம் அவர்கள் எந்த விடயங்களில் இடர்படுகின்றனர் என்பதை அறிய முடியும். உதாரணமாக கணிதத்தில் பிரசினம் தீர்த்தலில் (வசனக் கணக்குகள்) ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் அதில் வாசித்தல், கிரகித்தல், நிலைமாற்றுதல், செய்கை, குறித்தல் ஆகிய படிகளில் (நேறஅயnஇ 1978) படிகளில் இடர்படுகின்றனர் என அறிய முடியும் பரிகாரக் கற்பித்தல் தேவைப்படும் மாணவர்களை அவர்களுடைய வகுப்பறையில் ஆசிரியரால் பல்வேறு முறைகளால் இனங்காண முடியும்.
புரிகாரக் கற்பித்தலில் ஈடுபடுபவர் வகுப்பாசிரியராக இருக்கலாம் அல்லது பரிகாரக் கற்பித்தலில் அனுபவம் வாய்ந்த வேறோர் ஆசிரியராக இருக்கலாம். வேறோர் ஆசிரியர் பரிகாரம் வழங்குவதாக இருப்பின் அவருக்கு வகுப்பாசிரியர் மாணவனின் இடர்ப்பாடுகள்/குறைபாடுகள் பற்றிய தகவல்களை வழங்குதல் அவசியமானதாகும்.

பரிகாரக் கற்பித்தல் என்பது மீளக் கற்பித்தல் அல்ல. அது பிள்ளை இடர்ப்படும் விடயத்தை அவதானித்து அந்த இடரப்;பாட்டைத் தீர்த்தல் ஆகும். (வைத்தியர் நோயாளியின் நோயினைக் கண்டறிந்து அதனுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஒப்பானதாகும்).

4. பரிகாரக் கற்பித்தலுக்குரிய செயலொழுங்கு


பரிகாரக் கற்பித்தலில் ஈடுபடுபவர்கள் பின்பற்ற வேண்டிய செயலொழுங்காக ஐந்து படிகள் உள்ளன. அவையாவன:-

1. மாணவருடன் உரையாடல், பரிசீலித்துப் பார்த்தல், பரீட்சித்தல், அவதானித்தல்
2. ஆசிரியர் மாணவருடன் உரையாடலில் ஈடுபடும் போது மாணவரைப் பற்றிய படம் ஒன்றினை மனதில் உருவாக்கிக் கொள்ளல். மாணவரின் பிரச்சினையை இனங்காணுதல்
3. மாணவரின் பிரச்சினையை இனங்கண்ட பின்னர் அவருக்கு பரிகாரம் வழங்குவதற்குரிய திட்டத்தை உருவாக்குதல் வேண்டும்.
4. குறைகளைக் கண்டவுடன் பரிகாரம் வழங்கப்படல் வேண்டியது அவசியமும் முக்கியமுமானதாகும்
5. விசேடமாக பரிகாரம் அளிக்கப்பட வேண்டிய மாணவர்களை குறிப்பான சோதனைகள் (அலகுப் பரீட்சைகள், விடயப் பரீட்சைகள்) கணிப்பீடுகள் (இடைநிலைக் கணிப்பீடு, இறுதிக் கணிப்பீடு ) மூலம் இனங்கண்டு விசேட பரிகாரமளிக்கப்படல் அவசியம்.
மேலே குறிப்பிடப்பட்ட செயலொழுங்கில் பரிகாரக் கற்பித்தலில் ஈடுபட முடியும்.

5. பரிகாரக் கற்பித்தலுக்குரிய செயலொழுங்கில்; இனங்காணக் கூடிய காரணங்கள்

மாணவரிடையே காணப்படும் இடர்பாடுகளுக்கு பல்வேறு காரணங்கள் காணப்படலாம். அவற்றில் சில கீழே தரப்படடுள்ளன.

(1). தவறான எண்ணக்கரு உருவாக்கம் அல்லது தவறான விளக்கம்
விஞ்ஞான பாடத்தில் திணிவு, நிறை என்பவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை அறியாது இவற்றினை தவறான இடங்களில் பயன்படுத்தல்

(2).தவறான கற்பித்தல் முறை
சில விஞ்ஞானப் பரிசோதனைகளை ஆய்வு கூடத்தில் மேற்கொண்டு கற்பிக்க வேண்டியுள்ளது. ஆனால் சில ஆசிரியர்கள் தமது வசதி கருதி ஆய்வு கூடத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டு கற்பிக்காது வெறுமனே விரிவுரைமுறையில் கற்பித்தலானது மாணவரிடையே தவறான விளக்கங்களை ஏற்படக் காரணமாக அமையலாம்

(3). பாடம் தொடர்பான பீதி சில மாணவரிடம் சில பாடங்கள் தொடர்பாக பயம் காணப்படுகின்றது. உதாரணமாக கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களை கடினமானவையென சில மாணவர்கள் நம்புகின்றனர். இவர்கள் இப்பாடங்களைப் பற்றிய பயத்துடனேயே கற்பதால் அவர்களால் இயல்பாகக் கற்க முடியாதுள்ளது.

(4).தவறான கற்றல் பழக்கங்கள்
விளங்கிக் கற்க வேண்டியவற்றை மனனம் செய்தல் போன்ற தவறான கற்றல் பழக்க வழக்கங்கள் மாணவரின் கற்றலில் இடர்பாட்டைத் தோற்றுவிக்கலாம்.

(5). பௌதிக மற்றும் உணர்வுபூர்வக் காரணிகள்
பாடக் கற்பித்தல் நடைபெறும் நாளில் மாணவனுக்கு உடல், உள ரீதியாக பிரச்சினைகள் இருப்பின் அப்பாடத்தைப் பற்றிய விளக்கமானது மாணவனுக்கு சரியாக கிடைக்காது போகலாம்.

(6). ஆசிரியரின் மனப்பாங்கு
சில ஆசிரியர்கள் பாடத்தை முழுமையாகக் கற்பிக்காது இடையிடையே சில விடயங்களைக் விட்டு விட்டுக் கற்பித்தல், பிள்ளைகளுக்கு ஆசிரியர் கற்பிப்பது விளங்குகின்றதா என்பதைப் பற்றி ஆராயது தொடர்ச்சியாக் கற்பித்தல்

பரிகாரக் கற்பித்தலுக்குரிய மாணவரின் இடர்பாடுகளை கண்டறிந்த பின்னர் அந்தக் காரணங்களின் அடிப்படையில் கற்பிக்கும் போது பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்

– குறிப்பான விடயத்தை அறிந்து கற்பித்தல் எந்த விடயம் மாணவனுக்கு புரியவில்லையென்பதை அறிந்த பின்னர் அந்த விடயத்தை மீளக் கற்பித்தல் – கணினி உதவியுடன் கற்பித்தல்
மாணவர்களுக்கு கணனி உதவியுடன் ( படங்கள், ஒலிகள் என்பவற்றைப் பயன்படுத்தி)கற்பிக்கும் போது அவர்களுக்கு பாடத்தைப் பற்றிய விளக்கம் பூரணமாகக் கிடைக்கும்.
– பயிற்சியளித்தல்
மாணவருக்கு விளங்காதவற்றைக் மீளக் கறபித்த பின்னர் அந்த விடயத்தில் பல்வேறு பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்கள் கற்றவற்றறை நினைவில் வைத்திருக்க உதவ முடியும்

6. பரிகாரக் கற்பிதலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய மாணவரை இனங்காணும்; முறைகள்

. வகுப்பறை இடைவினை: மாணவர் வினாக்கள் வினவப்படும் போது அடிக்கடி தவறான விடையளித்தல். மாணவர் குழப்பத்துடன் காணப்படல், முழு வகுப்புக்கும் வினவப்படும் வினாக்களுக்கு விடையளிக்காதிருத்தல்

. வீட்டு வேலைகள்:- வீட்டு வேலைகள் வழங்கப்படும் போது மாணவர் அவற்றுக்கு விடையளிக்காமல் வருதல்,
சிலவேளைகளில் எளிதில் இனங்காணத்தக்க வகையில் மற்றையவர்களுடைய விடைகளைப் பார்த்து எழுதிக் கொண்டு வருதல்
.

இ. பாடப்பரீட்சைகள் மற்றும் தவணைப் பரீட்சைகள் போன்றவற்றில் மாணவரின் பெறுபேறுகள்

• மிகவும் குறைவான புள்ளிகளைப் பெறுதல்;
• வினாக்களுக்கு விடையளிக்காதிருத்தல்
• விடைத்தாளை வெறுமையாகக் கையளித்தல்
• ஒரே விடயத்தை மீளமீள எழுதுதல்

ஈ. கல்விச் செயற்பாடுகள்
வகுப்பறைச் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டாது ஒதுங்கியிருத்தல்

உ. எண்ணக்கருக்களைக் கற்றல்
குறிப்பிட்ட தலைப்புத் தொடர்பான எண்ணக்கருக்கள், வாய்ப்பாடுகள் என்பவற்றில் தெளிவற்றிருத்தல்

ஊ. கணித்தல் திறன்கள்
அடிப்படைக் கணிதச் செய்கைகளை தவறாகச் செய்தல்
தவறான செய்முறைகள்

எ. பிரசினம் தீர்த்தல்
மாணவனுக்கு பிரசினம் தீர்த்தல் தொடர்பாக போதிய விளக்கம் இன்மை காணப்படல்

ஏ. அறிவின் பிரயோகம்
வவேறு நிலைகளில் கற்ற விடயங்களை பிரயோகிக்கத் தெரியாமல் இருத்தல்

7. மாணவரில் இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு பின்வருவனவும் காரணங்களாக அமைய முடியும்

அ. ஞாபகம் ஃ நினைவாற்றல்
தகவல்களை விடயங்களை நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் குறைவு

ஆ. விளக்கம்
தான் வாசித்த விடயங்களைப் புரிந்து கொள்ளாமை

இ. முன்வைத்தல்
தனது கருத்துக்களை முன்வைப்பதில் இடர்படுதல்- போதுமான அளவு சொல்வளம் காணப்படாமை

ஈ. அறிவு இடைவெளி
போதிய வரவின்மை
பாடங்களில் கவனம் செலுத்தாமை

உ. பெற்றோரின் மனப்பாங்கு
பிள்ளைகளில் கூடியளவு எதிர்பார்ப்பு

ஊ. கற்றல் மொழி மூலம்
மொழியில் போதியளவு ஆற்றலின்மை

எ. பௌதிகக் காரணிகள்
பார்வை, கேட்டல் குறைபாடுகள்
வேறு நோய்கள்

ஏ. தனிநபர்க் காரணிகள்
வாய்மொழி மூலப் பரீட்சைகளில் மட்டும் விடையளித்தல்
கவனம் செலுத்த முடியாமை
சுயநம்பிக்கையின்மை
தாழ்வு மனப்பான்மை
மன உறுதியின்மை

8. முடிவு.
உலகலாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் பரிகாரக் கற்பித்தல் மேற்கொள்ளப்படுகின்றது. இம்முறையைப் பயன்படுத்துவதால் கற்றலில் இடர்பாடுகளை எதிர்கொள்ளும் மாணவர்களின் இடர்பாடுகளை களைந்து அவர்களின் தொடர்ச்சியான கற்றலுக்கு உதவ முடியும்.

பரிகாரக் கற்பித்தல்முறையை அபிவிருத்தியடைந்த நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளான இலங்கை, இந்தியா பொன்ற நாடுகளும் பயன்படுத்துகின்றன.

இலங்கையில் கடந்த மூன்று தசாப்த்தங்களாக நிலவிய கொடிய போரினால் நாடளாவிய ரீதியில் மாணவர்கள் கற்றலில் பல்வேறு விடயங்களை இழந்தனர். இக்காலங்களில் யுனிசெப் (ருNஐஊநுகு) ஆனது தேசிய கல்வி நிறுவகத்துடன் இணைந்து நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பரிகாரக் கற்பித்தல் பயிற்சிகளை ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்களுக்கு வழங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது.

எனினும் போருக்குப் பின்னரான இன்றைய காலகட்டத்தில் கூட பல்வேறு காரணங்களால் இலங்கையில் சிறுவர்கள் தமது கற்றலில் சில பகுதிகளை இழப்பதால் அவர்களை வழமையான கற்றலில் ஈடுபடச் செய்வதற்காக பரிகாரக் கற்றல் முறையைக் கையாள முடியும்.

நன்றி: காண்பியம்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!