2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முதலாம் தர கற்றல் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் ஆரம்பம் மற்றும் பரீட்சைகள் தொடர்பிலும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன கண்டியில் நேற்று (19) தெளிவுபடுத்தினார்.
“பாடசாலை தவணை 23ஆம் திகதி முடிவடைந்து 3ஆம் திகதி திறக்கப்படும். விடுபட்ட பாடசாலை நாட்களை ஈடுசெய்ய வேண்டும் என்பதால் கல்வியாண்டு ஏப்ரலில் முடிவடைகிறது.
5 ஆம் தர புலமைப்பரிசில் ஜனவரி மூன்றாம் வாரத்தில் முடிவடையும். க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகும். பெப்ரவரியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் ஆரம்பமாகி ஜூன் நடுப்பகுதியில் நிறைவடையும்.
கேள்வி: முதலாம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை ஏப்ரலில் தொடங்குகிறதா?
அமைச்சர் தினேஷ் குணவர்தன – “முதலாம் வகுப்பு உத்தியோகபூர்வமாக ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்படும். தற்போது அந்த சுற்றறிக்கைகளுக்கு அமைய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும். இந்த வாய்ப்பு பெற்றோருக்கு உள்ளது.”
கேள்வி: முதலாம் தரம் ஏப்ரல் மாதம் தொடங்குமா?
அமைச்சர் தினேஷ் குணவர்தன – “அடுத்த மூன்று மாதங்கள் வகுப்பறையில் விடுபட்ட நேரங்களுக்கு ஒதுக்கப்பட்டு அனைத்து அரச பாடசாலைகளும் அந்தத் திட்டத்தில் செயற்பட்டு வருகின்றன.ஏப்ரலில் தரம் ஒன்று ஆரம்பமாகும்.