சுமார் 4,000 மாணவர்களை ஆசிரியர் பயிற்சிக்காக உள்ளீர்க்கத் திட்டமிடப்பட்டுள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்காக 47,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ்வருடம் விண்ணப்பங்கள் ஒன்லைனில் மட்டுமே கோரப்பட்டிருந்தன. அனைத்து விண்ணப்பங்களும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என்றும் அதன் பின்னர் நேர்காணல்கள் நடத்தப்படும். கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தகுதியானவர்களை அந்தந்த கல்வியியல் கல்லூரிகளில் நவம்பர் உள்ளீர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.