சுமார் 5500 பாடசாலைகள் இன்று மூன்றாம் தவணைக்காக திறக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாணம், மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களின் பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 13 வரையான வகுப்புக்கள் இன்று ஆரம்பமாகின்றன.
பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான ஏற்பாடுகளில் குறைபாடு உள்ளதாக பல தரப்பினரும் குற்றம் சாட்டிய போதிலும் கல்வி அமைச்சு தீர்மானத்தில் உறுதியாக இருந்தததை அடுத்து பாடசாலைகள் ஆரம்பமாகின்றன.
அத்தோடு,
பாடசாலைகளிலிருந்து கொரோனா தொற்று பரவும் நிலைக்கு தள்ளப்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் நிச்சயமாக நான் அரசாங்கத்தின் சார்பாக ஏற்க வேண்டியிருக்கும் என்று கல்வி அமைச்சினி செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த வாரம் நிலமையை அவதானித்து தீர்மானங்களில் திருத்தங்கள் தேவை எனில் மேற்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலளார் தெரிவித்துள்ளார்.