உலக உணவுத் திட்டத்தின் கீழ் ஒரு பாடசாலை மாணவருக்கு நாளொன்றுக்கு 75 கிராம் உணவு வழங்க விவசாய அமைச்சின் தீர்மானம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.
நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு. அசேல சம்பத், 75 கிராம் அரிசி என்பது மிகக் குறைந்த அளவு என்றும் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்தால் முறையாக கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பாடசாலை மாணவர் ஒருவருக்கு நாளொன்றுக்கு உணவு வழங்குவதற்கு அரசாங்கம் 60 ரூபாவை செலவிட எதிர்பார்த்துள்ளதாக முன்னணி சோசலிச கட்சியின் பிரதான பிரச்சார செயலாளர் திரு.புபுது ஜயகொட விமர்சனம் தெரிவித்துள்ளார். 60 ரூபாவிற்கு எவ்வாறான உணவை வழங்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் திரு.கெஹலிய ரம்புக்வெல்ல, இது தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்தார்.
60 rupees per day for one school student.. 75 grams of rice..