காது செவிடாகும் அளவிற்கு மாணவர் ஒருவரைத் தண்டித்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராக உயர் நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மாத்தறைப் பிரதேச பாடசாலை ஒழுக்கத்துக்குப் பொறுப்பான ஆசிரியர் ஒருவர் மாணவர் ஒருவரை தாக்கியதில் அவரது கேட்டல் திறன் முற்றாகப் பாதிப்படைந்தமையை அடுத்து தொடுக்கப்பட்ட வழக்கிலேயே தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவருக்கு நஷ்டஈடாக 150000 ரூபா வழங்குமாறு ஆசிரியருக்கு உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்தோடு மாணவனின் கேட்டல் திறன் நிரந்தர பாதிப்பு ஏற்படுத்தியமை அடிப்படை உரிமை மீறல் நஷ்டஈடாக 500000 ரூபா வழங்குமாறும் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.