பல்கலைக்கழக அனுமதிக்கான வழிகாட்டல் கைநூலின் பிடிடிப் பிரதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அதற்கான இணைப்பு உருவாக்கப்பட்டுள்ள போதிலும் ஆவணம் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
அத்தோடு, பதிவிறக்கம் செய்வதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 500 ருபாய் கட்டணத்தை வங்கியல் செலுத்திய பின்னரே பிடிஎப் பிரதியை பதிவிறக்கம் செய்யலாம்.
முன்னைய வருடங்களில் பிடிஎப் பைல் இலவசமாக தரவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்பட்டிருந்தமை நினைவுகூரத்தக்கது.
கடந்த 19 ஆம் திகதி நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவும் காலத்தில், அதுவும் ஓரிரு வாரங்கள் பயணத் தடை விதிக்கப்படவுள்ள நேரத்தில் மாணவர்கள் வங்கிகளுக்குச் சென்று எவ்வாறு கட்டணம் செலுத்துவர். இலசவமாக வழங்க வேண்டுமல்லாவா என்று கேள்வி எழுப்பினர்.
எனினும் அது தொடர்பாக சாதகமான பதிலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கவில்லை.
எனினும் தினகரன் பத்திரிகையில் வெளிவந்துள்ள இரு பக்க விளம்பரத்தையும் விண்ணப்ப இணைப்பையும் பின்வரும் இணைப்பில் சென்று பார்க்க முடியும்.