சபரகமுவ மாகாணத்தில் கேகல்ல மற்றும் ரத்னபுர ஆகிய மாவட்டங்களில் புதிதாக தேசிய பாடசாலைகள் 81 ஆரம்பிக்கப்படும் என மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.
நேற்று சூம் தொழிநுட்பத்தினூடாக நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த மாகாண ஆளுனர் டிகிரி கொப்பேகடுவ இதனைத் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பிரதம செயலர் ரஞ்சனி ஜயகொடி, மாகாணக் கல்விப் பணிப்பாளர் சேபால குறுப்புஆரச்சி ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வாறு தேசிய பாடசாலைகளாக மாற்றப்படும் ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் அரசாங்கம் 20 இலட்சம் ரூபாய்களை வழங்கவுள்ளதாக அவர் இதன் போது தெரிவித்தார்.
இதன் மூலம் பாடசாலையின் அத்தியவசியத் தேவைகளையும் புனர்நிர்மாண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.