கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரால் அண்மையில் பதிலீட்டு இடமாற்றம் என்ற அடிப்படையில் கல்முனையில் இருந்து
இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் குறித்த முறையீடுகளை ஜனாதிபதி செயலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
மேற்படி இடமாற்றங்களால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முன்வைத்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி செயலகம் இந்த இடமாற்றங்களை மீளப் பரிசீலிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
குறித்த இடமாற்ற ஒழுங்கீனங்களின் காரணமாக அவற்றை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி மாகாணம் முழுமையாக அமுலாகும் வகையில் புதிய கல்வி வருடத்தில் இடமாற்றத்தை ஒழுங்குமுறைப்படி மேற்கொள்ளுவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் மாகாண பிரதான செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் காரணங்கள் காரமணமாக இந்த இடமாற்றங்களை நிறுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
- இடமாற்றத்திற்காக தயார்படுத்தப்பட்ட பட்டியிலில் 98 பேர் இருப்பினும் 55 பேருக்கு மாத்திரம் இடமாற்றம் வழங்கப்பட்டமை
- இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள வலயங்களில் கல்முனையை விட கூடுதலான மேலதிக ஆசிரியர்கள் காணப்படுகின்றமை
- கிழக்கு மாகாணத்தில் ஏனைய வலயங்களில் எந்த இடமாற்றமும் செய்யாது கல்முனையில் மாத்திரம் நடைமுறைப்படுத்தியமை
- தற்போதைய நெருக்கடி நிலமையில் ஆசிரியர்கள் தூரப் பிரதேசங்களுக்கு பயணிக்க முடியாது
- சில ஆசிரியர்கள் முன்வைத்துள்ள மருத்துவ காரணிங்கள்