பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்றை எதிர்வரும் புதன் கிழமை நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் இலங்கையின் முன்னணி மருத்துவர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் உட்பட பல வல்லுநர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.
பாடசாலைகள், முன்பள்ளிகள், பிரிவேனாக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பாக பொருத்தமான ஆலோசனைகளைப் பெறுவதற்கும் அதற்கேற்ப பாடசாலைகளைத் திறப்பதற்கும் முடிவு எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். தொரிவித்துள்ளார்.
பாடசாலைகள், முன்பள்ளிகள், பிரிவேனாக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பாக வாரந்தோறும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.