அரச சேவையை தொடர்ச்சியாக நடாத்திச் செல்லல்: கல்வி சாரா ஊழியர்களை பணிக்கு அழைத்தல் தொடர்பாக கல்வி அமைச்சு வழிகாட்டல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாடசாலை மூடப்பட்டு, பிள்ளைகள் ஆசிரியர்கள் யாருமே பாடசாலைக்கு வருவதில்லை என்பதனாலும் கோவிட் நிலமையைக் கருத்திற் கொண்டும் அத்தியவசிய சேவையை மாத்திரம் நடாத்திச் செல்வதற்கு தேவையான அத்தியவசிய ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைத்தல் போதுமானது என்றும் அவர்களை அழைப்பதற்கான ஒழுங்குமுறை ஒன்றை நிறுவனத் தலைவர் தயாரிக்குமாறும் வழங்கப்படும் தினத்தில் கடமைக்கு வருகை தராத ஊழியர்களுக்கு விடுமுறை தினமாகக் கணிப்பிட வேண்டும் என்றும் இவ்வழிகாட்டல் குறிப்பிடுகிறது.