தற்போதைய சூழ்நிலையில், பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஒன்லைனில் நடத்துவதா அல்லது அல்லது குறிப்பிட்ட நாட்களுக்கு நிறுத்துவதா என்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நெத் நியூஸிடம் கருத்து தெரிவித்த அவர், போக்குவரத்து பிரச்சினை இல்லாத கிராமப்புற பாடசாலைகளில் கல்வியை நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது பாடசாலைகளை மூடி இந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதம் வழங்கத் தீர்மானிக்கப்பட்ட விடுமுறைகள் ரத்துச் செய்ய கலந்துரையாடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாளை சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.