எரிபொருள் நெருக்கடி காரணமாக பொதுத்துறை ஊழியர்கள் இரண்டு வாரங்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெள்ளிக்கிழமை (17) பொதுத்துறைக்கான வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம் பற்றிய சுற்றறிக்கையை வெளியிட்டது.
அதன்படி, திங்கட்கிழமை (20) முதல் பணிக்கு வருமாறு கோரப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது.
பொதுச் சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக குறைந்தபட்ச ஊழியர்களை அழைப்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்களம் / நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, எந்தவொரு பொது ஊழியரையும் அவர்/அவள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள அமைச்சு, திணைக்களம் அல்லது நிறுவனத்திற்கு நியமிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பணியாளர்கள் பணிக்கு வரவழைக்கப்படும் போது, அவர்கள் ஷிப்ட் அடிப்படையில் அழைக்கப்பட வேண்டும்.
ஒரு பொதுத்துறை ஊழியர் பொது நிறுவனத்தின் அதிகாரத்தால் தயாரிக்கப்பட்ட ஷிப்ட் அடிப்படையில் வரத் தவறினால், அந்த ஊழியரிடமிருந்து ஒரு தனிப்பட்ட விடுமுறையாக கருதப்படும் எனவும் சுற்றுநிருபம் தெரிவிக்கிறது.