யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியில் காட்சிப்படுத்தப்பட்ட போலிக் கலாநிதி பட்டம் தொடர்பான காட்சிப்படுத்தல் பல்வேறு எதிர்ப்புக்களை அடுத்து நீக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பீடாதிபதி ஒருவரின் கலாநிதிப் பட்டம் தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல்கள் பெறப்பட்டு குறித்த கலாநிதிப் பட்டம் உண்மையான முறைமையில் பெறப்பட்டதல்ல என்பதை உறுதிப்படுத்திய பின்னர், இந்த பிழையான முன்னுதாரணத்தை நீக்குமாறு பல்வேறு தரப்பினர் கல்லூரி நிர்வாகத்திற்கு அழுததங்களைப் பிரயோகித்தனர்.
இதன் காரணமாக கல்லூரி நிர்வாகம் துணிச்சாலானதும் நேர்மையானதுமான இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இது கல்விச் சமூகத்திற்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் என கல்வியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.