கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரும் சப்ரகமுவ மாகாணக் கல்விப் பணிப்பாளரும் இலங்கை கல்வி அமைச்சின் செயலாளருக்கு மேல் அதிகாரம் கொண்டவர்களா என இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க வினா எழுப்பியுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தலில் பாடசாலைகளை நடாததும் ஒழுங்கு குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அதற்கு முரணாக, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளை அனைத்தையும் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ள பின்னணியில் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க வினா எழுப்பியுள்ளார்.
இன்று காலை பாடசாலைகளை நடாத்துவது தொடர்பான தீர்மானம் தொடர்பாக முகநூல் நேரலையில் உரையாற்றும் போது, கல்வி அமைச்சு பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக பொதுத் தீர்மானத்தை அறிவிக்காமை மற்றும் சில மாகாணக் கல்விப் பணிப்பாளர்களின் பொறுப்பற்ற தீர்மானங்களை அவர் கண்டித்தார்.
பாடசாலைகளில் அதிபர்கள் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களுக்கு எதிராக குறிப்பிட்ட பிரச்சினை உள்ள பாடசாலை ஆசிரியர்கள் இணைந்து போராட வேண்டும் என்றும் அதுவே ஒரே வழிமுறையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.