ஆசிரியர்கள் வசிக்கும் பகுதியிலேயே உள்ள பாடசாலைகளில் பணிக்கமர்த்துவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலைக்கு விசேட நியமனமாக இதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும், அதன் பின்னர் ஆசிரியரால் இடமாற்றம் பெற முடியாது என்றும் கல்வி அமைச்சர் இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
“இந்த நியமனம் பாடசாலைக்கு சிறப்பு நியமனமாக வழங்கப்படுகிறது. அந்த ஆசிரியர் பாடசாலைக்கே சேவை செய்ய வேண்டும். வேறொரு மாகாணத்திற்கு அவர்களால் செல்ல முடியாது.
பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும். இவர்களுக்கு வேறு மாகாணங்களுக்கு வழங்கப்படமாட்டாது. அதன் பின்னர் நீங்கள் வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்ல முடியும் என்றார்