இலங்கையில் தற்போது 50% ஆக உள்ள பணவீக்கம் அடுத்த சில மாதங்களில் 70% ஆக உயரும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பணவீக்க உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைப் பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார். சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களும் இதனால் பாதிக்கப்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரித்துள்ளார்.
தற்போது நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.