மத்திய மாகாணக் கல்வித்திணைக்களம் ,இலங்கை ஆசிரியர் சேவையில் வருடாந்த இடமாற்றம் 2023
- மத்திய மாகாணத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சேவை புரியும் ஆசிரியர்களிடமிருந்து 2023 ஆம் வருடத்திற்கான ஆசிரிய சேவை இடமாற்றங்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
2.சகல விண்ணப்பப் படிவங்களும் இவ் அறிவுறுத்தல்கள் விளம்பரப்படுத்தப்பட்ட, பின்
- வலயத்திற்குள் மற்றும் வலயங்களுக்கிடையிலான விண்ணப்பங்கள் www.centralprovinceedu.lk இணையதளத்தினூடாக நிகழ்நிலை முறையில் (online) 2022 ஜூலை மாதம் 30ம் திகதி அல்லது
அதற்கு முன் கிடைக்கப் பெறச் செய்யவும். II. மாகாணங்களுக்கிடையிலான மற்றும் தேசிய பாடசாலை விண்ணப்பங்கள் 2022 ஜூலை மாதம் 30ம் திகதி அல்லது அதற்கு முன் கிடைக்கும் வண்ணம், அதிபர் ஊடாக வலயக் கல்விப்
பணிப்பாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்). 3. இடமாற்ற விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் போது,
1.வலயத்தினுள் இடமாற்றம் மற்றும் வலயங்களுக்கிடையிலான இடமாற்ற விண்ணப்பங்கள் www.centralprovinceedu.lk எனும் இணையதளத்தின் ஊடாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். (விண்ணப்பப் படிவங்கள் நிரப்பப்படும் போது உமக்கு விருப்பமான இணையதள வசதி உள்ள இடத்தில் நிகழ்நிலையின் ஊடாக (online) விண்ணப்பிக்கலாம் என்பதோடு, அது தொடர்பாக தொழில்நுட்ப நிலையம் மற்றும் பிரதேச கணினி வள நிலையம் (CRC) நிலையத்தினூடாக இணையதளத்திற்கு செல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.)
- மாகாணங்களுக்கு இடையில் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கு, விண்ணப்பிக்கும் போது, மத்திய
மாகாணக் கல்வி திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விண்ணப்பப் படிவத்தை,மட்டும் பயன்படுத்தவும். (இவ் விண்ணப்பப் படிவத்தை மத்திய மாகாணத்தினுள் மிகவும் அருகில் இருக்கும் வலய கல்விக் காரியாலயத்தில் பெற்றுக் கொள்ளலாம்.)
III. மாகாணங்களுக்கிடையிலான விண்ணப்பங்கள் 05
IV, மாகாண அரசு சேவையிலிருந்து தேசிய பாடசாலைகளுக்கான விண்ணப்பங்கள் – 05
V. தேசிய பாடசாலையிலிருந்து மாகாண பாடசாலைக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய பாடசாலை பணிப்பாளரினால் குறிக்கப்படும் கால வரையறையினுள் அதற்காக வெளியிடப்படும் விண்ணப்பப்
படிவத்தில் முன்வைத்தல் வேண்டும். VI. மேலே III, IV, மற்றும் V ஆகிய விடயங்களுக்கு அமைய முதல் நியமன கடிதம் மற்றும் நிரந்தர நியமனக் கடிதம் என்பன உறுதிப்படுத்தப்பட்ட, பிரதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பதுடன் உறுதியுரையும் பூரணப்படுத்தி இருக்க வேண்டும்.
முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் மத்திய மாகாணக் கல்வி திணைக்களத்தினால்
வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தவிர்ந்த வேறு விண்ணப்பப் படிவங்கள், உரிய திகதியின் பின் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் என்பன நிராகரிக்கப்படும். என்பதை விசேடமாக கருத்திற் கொள்ளவும். (விண்ணப்பப்படிவம் A4 அளவு 4 பக்கங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.)
வலயத்தினுள், வலயங்களுக்கிடையில் இடமாற்ற விண்ணப்பங்கள் தொடர்பாக மேலதிக
செயற்பாடுகள் உரிய வலயக் கல்வி காரியாலயத்தினாலும், மாகாணக் கல்வி திணைக்களத்தினாலும் இணையதளத்தினூடாக செயற்படுத்தப்படும்.
5.சுற்றுநிருப இல. ED/1/27/1/5/1/2007, 2007/20 மற்றும் 2007.12.13 திகதி இடப்பட்ட தேசிய ஆசிரியர் சேவை இடமாற்ற சுற்றுநிருபம் மற்றும் மத்திய மாகாண சபையின் தீர்மானங்களின் படி 2023ஆம் வருடத்திற்கான ஆசிரிய சேவை இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
- மத்திய மாகாணத்தில் ஆசிரிய சேவை இடமாற்றங்கள் கீழ்க்காணும் நிபந்தனைகளுக்கு அமைவாக
செயற்படுத்தப்படும்.
- இடமாற்றத்திற்கான விண்ணப்பப் படிவங்கள் விண்ணப்பிக்கும் போது, நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்திருத்தல் அவசியமாகும். உ+ம்; (கஷ்டப்பிரதேச சேவையினை பூர்த்தி செய்திருத்தல்) கஷ்டப்பிரதேச சேவை காலத்தில் பாடசாலை மற்றும் வலயம் தாங்களை மேலதிகம் அல்லது பதிலாசிரியர் இன்றி விடுவிக்கலாம் என குறிப்பிட்டிருந்தாலும், சேவையின் தேவை கருதியும் நியமன கடிதத்தின் நிபந்தனைகள் பூர்த்தி செய்வதற்காகவும் வேறு கல்வி வலயத்திலுள்ள கஷ்டப் பிரதேச பாடசாலைக்கு தங்களை பதவியில் அமர்த்த முடியும்,
II. ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
III. மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றம் தொடர்பாக மத்திய மாகாணத்தினுள் குறைந்தபட்சம் 5 வருடங்கள் சேவையினை பூர்த்தி செய்திருத்தலுடன் நியமனம் நிரந்தரமாக்கப்பட்டிருத்தல் அவசியம்.
- பாடசாலையில் மேலதிக ஆசிரியர் அல்லது ஒரே பாடசாலையில் 8 வருடங்கள் சேவையாற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம் கோராத போதிலும் விண்ணப்ப படிவமின்றியே சேவையின் தேவை கருதி அவ் ஆசிரியரை இடமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட நேரிடலாம்.
- இடமாற்ற விண்ணப்பப் படிவம் இணையதளத்திற்குள் பதிவேற்றப்பட்டதும் விண்ணப்பதாரருக்கு பதிவு இலக்கம் வழங்கப்படும்.
- மாகாணங்களுக்கிடையில் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான இடமாற்ற விண்ணப்பப் படிவம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக, மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு கிடைத்த பிறகு அந்த விண்ணப்பப் படிவங்கள் பதிவு செய்யப்பட்டு உங்களுக்கு உரிய இலக்கம் அனுப்பப்படும். தங்களுக்கு வழங்கப்படும் பதிவிலக்கத்தை இடமாற்ற செயற்பாடுகளில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
எம்.ஜி. அமரசிரி பியதாச மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர்.