ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் 27 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் நடவடிக்கைகளை, கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.
மொனராகலை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுக்கூட்டம் நேற்று நடைபெற்ற போதே, மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
27 பாடசாலைகளில் தமிழ்ப் பாடசாலையொன்றும், முஸ்லிம் பாடசாலையொன்றுமாக இரு தமிழ்மொழி மூல பாடசாலைகளும் அடங்கியுள்ளன.
மொனராகலை கல்வி வலயத்தின் ஸ்ரீ விபுலானந்தர் தமிழ் மத்திய மகா வித்தியாலயமும், பிபிலை கல்விவலயத்தின் பக்கினிகா வெல முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயமுமாக இரண்டு தமிழ்மொழி மூல வித்தியாலயங்களே, தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன.
மொனராகலை கல்வி வலயத்தின் ஏழு மத்திய மகா வித்தியாலயங்களும் பிபிலை கல்வி வலயத்தின் ஏழு மத்திய மகா வித்தியாலயங்களும், வெள்ளவாயா கல்வி வலயத்தின் ஐந்து மத்திய மகா வித்தியாலயங்களும், தனமல்விலை கல்வி வலயத்தின் ஆறு மத்திய மகா வித்தியாலயங்களுமாக 25மத்திய மகா வித்தியாலயங்கள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன.
குறிப்பிட்ட 25 பாடசாலைகளும் சிங்களமொழி மூலபாடசாலைகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.