பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை இலங்கையின் பதில் ஜனாதிபதியாக நான் செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள விக்கிரமசிங்க, இந்தக் காலப்பகுதியில் தற்காலிகமாக பதில் ஜனாதிபதியாக செயற்படவுள்ளதாக தெரிவித்தார்.
இலங்கையின் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க மேலும் அறிவித்துள்ளார்.
முதலாவதாக, குடியரசுத் தலைவருக்குப் பயன்படுத்தப்படும் “அதிமேதகு” என்ற சொல் இனி பயன்படுத்தப்படாது என்று அவர் கூறினார்.
இரண்டாவதாக, நாட்டிற்கு ஒரே ஒரு தேசியக் கொடியே தேவைப்படுவதால், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடி நீக்கப்படும் என விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் பதில் ஜனாதிபதியாக தற்காலிகமாக கடமையாற்றும் போது மேற்கொள்ள வேண்டிய பின்வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீள அமுல்படுத்துவதற்கு தேவையான சட்டமூலங்களை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
- அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீள அமுல்படுத்துவதற்கு தேவையான சட்டமூலங்களை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- அடுத்த வாரம் தெரிவு செய்யப்படவுள்ள புதிய ஜனாதிபதிக்கு 19ஆவது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணப்படுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது தொடர்பாக எம்.பி.க்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- நாட்டில் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்துவதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
- சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
- அரசியலமைப்பை பாதுகாப்பேன், அரசியலமைப்பை மீறும் எந்தவொரு செயலையும் அனுமதிக்க மாட்டோம், அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து பாடுபடுவேன் என்று பதில் ஜனாதிபதி முடிவு செய்தார்.