உறுதியான பொருளாதாரத் திட்டம் இல்லாத வளர் முக நாடுகளின் பொருளாதாரம் எவ்வாறு சரிந்து விழும் என்பதற்கு இலங்கை மிகச் சிறந்த உதாரணமாகும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. .
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்கிறிஸ்டலீனா ஜோர்ஜியாவா சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக வளர்முக நாடுகளின் பொருளாதாரம் சரிந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் உரையாற்றிய Kristalina Georgieva இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
உக்ரைன் போருடன், உலக உணவு மற்றும் பொருட்களின் விலைகள் கடுமையான அழுத்தத்தில் இருப்பதாகவும், உலகளாவிய நிதி நிலைமைகள் எதிர்பார்த்ததை விட இறுக்கமாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வலுவான கொள்கைத் தலையீடு தேவை எனவும், இலங்கையை எச்சரிக்கை அடையாளமாக சுட்டிக்காட்ட முடியும் எனவும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மேலும் தெரிவித்துள்ளார்.