க.பொ.த சாதாரண தர மதிப்பீட்டு பணிகளில் பங்கேற்ற அனைத்து மதிப்பீட்டாளர்களுக்கும் மதிப்பீட்டின் முழு காலத்திற்கும் விசேட கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கொடுப்பனவு முதல் மற்றும் கடைசி நாள் தவிர ஏனைய நாட்களுக்கு ஒரு நாளுக்கு 1000/- வீதம் வழங்கப்படவுள்ளது.
மேலும், முன்பு அறிவுறுத்தப்பட்ட மதிப்பீட்டு செயல்பாட்டின் முதல் மற்றும் கடைசி நாளில் வழங்கப்பட்ட சிறப்பு பயண செலவு கொடுப்பனவின் கீழ் 1 கி.மீ முதல் 80 கி.மீ வரையிலான அனைத்து தூரங்களுக்குமான கொடுப்பனவு ரூ. 1000 / = ஆக மாற்றப்பட்டுள்ளது.
ஏனைய தூரங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாற்றங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை மதிப்பீட்டு பணிகளை மேற்கொண்ட அனைவரும் இத்திருத்தங்களின் அடிப்படையில் கொடுப்பனவுக் கோரிக்கைகளை முன்வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் வேண்டியுள்ளது.