பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக செய்தி ஒன்று உலாவுகின்றது.
பல வட்சப் குழுக்களிலும் அந்த செய்தி தீயாய் பரவுகிறது
நியுஸ் பெஸ்ட் இன் பிரேக்கிங் நியுஸ் செய்தி, நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை என அறிவிக்கிறது. எதிர்வரும் 9 ஆம் திகதி வழங்கப்படவிருந்த இரண்டாம் தவணைக்கான விடுமுறை நாளை முதல் வழங்கப்படுவதாக செய்தி தெரிவிக்கிறது.
பலரும் இது தொடர்பாக வினவியதால் நாம் இது தொடர்பாக தேடிப்பார்த்தோம்.
அவ்வாறான எந்த செய்தியும் கடந்த சில நாட்களில் நியுஸ் பெஸ்ட் இல் இடம்பெறவில்லை என்பதோடு, கல்வித் துறை சார்ந்த செய்திகளை தொடர்ச்சியாக நாம் அவதானித்துக் கொண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையில் அந்த செய்தி உண்மையானதாக இருக்க முடியாது என்பதை உறுதியாகக் கூறலாம்.
குறித்த செய்தியின் உண்மைத் தன்மை என்ன?
அந்த செய்தி கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி ஒளிபரப்பாகியது. கடந்த ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வழங்கப்படவிருந்த விடுமுறை முன்கூட்டியே ஒக்டோபர் 5 ஆம் திகதி வழங்கப்பட்டது. இந்த அறிவித்தல் ஒக்டோபர் 4 ஆம் திகதி வந்திருந்தது.
பாடசாலைகளை மூடுமளவிற்கு பிரச்சினைகள் தலை தூக்கவில்லை. திகதி நேரம் இன்றி பகிரப்படும் செய்திகளை நம்பாதீர்கள்.