எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் பாடசாலைகளை நடாத்திச் செல்வதற்கான வழிகாட்டல்களை கல்வி அமைச்சு வெளியிட்டு
- கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்கொண்டு செல்லல்
- முதலாம் தவணை செப்டம்பர் 7 வரை நீடிக்கும் என்பதோடு இரண்டாம், மூன்றாம் தவணை ஆரம்பம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்
- கற்றல் கற்பித்தலுக்கான காலப்பகுதியை உச்சளவில் பயன்படுத்துவற்காக தேசிய கல்வி நிறுவகம் தயாரித்த தரம் -11 வரையான வகுப்புகளுக்கான அத்தியவசியக் கற்றல் தேர்ச்சிகள் அடங்கிய பாடத்திட்டம் 25.07.2022 முதல் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். முதல் தவணைப் பரீட்சை நடாத்தப்படாது அலகுப் பரீட்சை மூலம் மதிப்பீடுகள் மேற்காெள்ளப்பட்டு மாணவர்களுக்கான பின்னூட்டல்கள் வழங்கப்படல் வேண்டும்.
- 25 ஆம் திகதி திங்கள் கிழமை முதல், மீண்டும் அறிவிக்கும் வரை வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் மாத்திம் சாதாரண நேரங்களில் பாடசாலைகள் நடாத்தப்படல் வேண்டும் என்பதோடு புதன், வெள்ளி ஆகிய தினங்களில் மாணவர்களக்கு வீட்டிலிருந்து கற்பதற்கான செயற்பாடுகள் மற்றும் நிகழ்நிலைக் கற்றல்கள் நடாத்தப்படல் வேண்டும். பாடசாலை நடாத்தப்படும் நாட்களில் அனைத்து பாடங்களுகம் கற்பிக்கப்படும் வகையில் நேர அட்டவணை மாற்றப்படல் வேண்டும்.
2. நாளாந்தம் பாடசாலைக்கு வருதல்
2.1 மாணவர்கள், கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஆளணிகள் பாடசாலைககு்கு உரிய நேரத்தில் பாடசாலைக்கு வருவது கட்டாயமானது என்பதோடு அசாதாரண நிலமைகளின் கீழ் தாமதித்து அல்லது வராவின்மை குறித்து அவர்களுக்கு சங்கடங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
2.2 பாடசாலை சீருடை கட்டாயம் ஆனால், சில மாணவர்கள் பாடசாலை சீருடை மற்றும் காலணி தொடர்பான பிரச்சினைகள் குறைபாடுகள் காரணமாக பாடசாலைகளுக்கு வருகை தரும் போது அவர்களை அதைரியப்படுத்தக் கூடாது.
3. பாடசாலைகளில் நிகழ்வுகள் வேறு வெளி நடவடிக்கைகளை நடாத்துதல்
3.1 பாடசாலைக் காலத்தில் தேவையற்ற மற்றும் அதிக செலவு கொண்ட வெளிநடவடிக்கைகளை தடுக்க வேண்டும். எனினும், கற்றல் கற்பித்தல் செயற்பாட்டுக்கு தடங்கல் இல்லாத வகையில் அகில இலங்கை ரீதியான போட்டிகளுக்கு மாணவர்களை தெரிவு செய்தல் மற்றும் பயிற்றுவித்தல் இடம்பெறல் வேண்டும்.