பரீட்சைகள் திணைக்களம் தனியார் மயப்படுத்தப்படுவதாக உலவும் செய்திகளில் உண்மையில்லை என பரீட்சைகள் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரீட்சைகள் திணைக்களத்தின் பெறுபேறு கணினி மயப்படுத்தும் பணியை தனியார் துறையினருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை பரீட்சைகள் திணைக்களம் மறுத்துள்ளது.
புள்ளிகளை கணினி மயப்படுத்தும் பணியை உள்ளக பணியாளர்களே மேற்கொள்ளுவதாகவும் இதனை தனியாருக்கு அல்லது தனியார் நிறுவனங்களுக்கோ வழங்குவதற்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
லங்காஈநியுஸ் உட்பட பல வலைத்தளங்களில் பரீட்சைகள் திணைக்களத்தின் புள்ளிகளை கணினிமயப்படுத்தும் பணியை தனியாருக்கு வழங்குவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.