மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து தெளிவுப்படுத்தும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளை ஆரம்பிப்பது மற்றும் அவற்றை நடாத்தி செல்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தங்களின் சேவைக்குட்ப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் விசேட அவதானம் செலுத்துவார்கள். இதன்படி நோய் அறிகுறிகள் அற்ற மாணவர்களே பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மாணவர்கள் வீட்டில் இருந்து வரும் போது அவர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான விடயங்களை கொண்டுவருவது கட்டாயமாகும். அத்துடன் போக்குவரத்து தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் வீட்டில் மற்றும் பாடசாலையில் பாதுகாப்பாக இருந்தாலும் போக்குவரத்தில் ஈடுபடும் போது தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைத்து செல்லும் விடயத்தில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாடசாலைக்குள் மற்றும் வெளியில் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து தெளிவுப்படுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாடசாலையில் தற்செயலாக தெமாற்றுடைய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்க்படவேண்டும், மற்றும் அவர்களை எவ்வாறு தனிமைப்படுத்த வேண்டும் என்பது குறித்து தளிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பாடசாலை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்து அச்சமடைய வேண்டிய தேலை இல்லை.