மேல் மாகாணத்தில் தரம் 12 ஐ ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு அனுமதி கோரியுள்ளது.
பெற்றாரின் வேண்டுகோளின் படி, கல்வி அமைச்சு தரம் 12 மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படாத வகுப்புக்களுக்கு வகுப்பறை நேரசூசியை ஒத்த தொலைக் கல்வி நேரசூசி ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கும் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
நேற்று முதல் தரம் 5, 11, 13 ஆகியன ஆரம்பிக்கப்பட்டது. இத்தரங்களில் சுமார் 79 வீத மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகளித்திருந்தனர். ஆசிரியர்களில் 78 வீதமானோர் சமூகளித்திருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.