National Fuel Pass – திட்டத்தின் அடிப்படையில் பல எரிபொருள் நிலையங்களிலும் விநியோகத்தை ஜுலை 26 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) மற்றும் லங்கா இந்தியன் ஒயில் கம்பனி (LIOC) ஆகியவற்றின் எரிபொருள் நிலையங்களில் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு முறை நாளை பல பகுதிகளில் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
வாகனத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்குவது எதிர்வரும் ஆகஸ்ட் 1 முதல் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஓகஸ்ட் 1 முதல் கியு ஆர் கோட் முறை மூலம் மாத்திரமே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 1 முதல் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்களை நிவர்த்தி செய்யும் வகையில், இதற்கு மாற்றாக ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை கடைசி இலக்க எண் தகடு முறை அமுலில் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.