பரீட்சை முடிந்ததும் அமைதியாக வீடுகளுக்குச் செல்லுங்கள். பொருத்தமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் தண்டனை கிடைக்கும் என பரீட்சைகள் திணைக்களம் நினைவூட்டியுள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதி பரீட்சைகள் முடிவடைந்ததன் பின்னர், பரீட்சை நிலையத்திற்குள் அல்லது வளாகத்தினுள்ளோ பொருத்தமற்ற நடவடிக்கைகளில் ஈபட்டால் அல்லது ஏனைய மாணவர்களுக்கு அசௌகரியம் ஏற்படும் விதமாக நடந்து கொண்டால், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் 1968 ஆம் இலக்க 25 வது பரீட்சைச் சட்டத்தின் கீழ் கடும் தண்டனை பெற்றுத் தரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்தாகவும் பரிடு்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் விளக்கங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனில் பின்வரும் இலங்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பொலிஸ் அவசரப் பிரிவு – 119
பொலிஸ் தலைமையகம் – 0112421111
பரீட்சைகள் திணைக்களம் உடனடி இலக்கம் 1911