15 ஆம் தேதி மேல் மாகாணத்தில் பாடசாலைகளைத் திறக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருவதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
05, 11 மற்றும் 13 ஆம் வகுப்புகளை முதல் கட்டமாகத் திறக்கவும் ஏனைய தரங்களை தாமதித்து திறக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்துள்ளார்.