கிழக்கு மாகாணத்தில் உயர் தொழில்நுட்ப ஆங்கில டிப்ளோமாதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்காக நடைபெற்ற தேர்வுக்கான பரீட்சையின் வினாத்தாளில் 17 வினாக்கள் ஏற்கனவே வெளியானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒரு தனியார் கல்வி வகுப்பு ஆசிரியர் தேர்வுக்கு முன்னர் ஒரு குழு மாணவர்களுக்கு 17 கேள்விகளையும் வழங்கியுள்ளதாக பரீட்சைக்குத் தோற்றியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக அண்மையில் நடைபெற்ற பரீட்சையின் போது ஏனைய மாணவர்கள் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளனர்.
இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் நாங்கள் விசாரித்தபோது, விசாரணை நடத்த இந்த விசாரணைகள் சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.