எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கோவிட் 19 நிலை காரணமாக எழும் மருத்துவ மற்றும் தாதிச் சேவை தொடர்பான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்காெண்டுள்ளது.
பிரதேச சுகாதார வைத்திய சாலைகள் மற்றும் நோயாளி காவுகை வண்டிகள் தயார் நிலையில் வைப்பதற்கும் மற்றும் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கும் நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பரீட்சை நிலையத்தின் சுகாதார மருத்துவ தொடர்புகள் மற்றும் வைத்தியர்கள் தொடர்பு மற்றும் கிருகி நீக்கம் உட்பட தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு பரீட்சை நிலையம் அமையப் பெற்றுள்ள பாடசாலைகயின் அதிபர் அல்லது பிரதி, உதவி அதிபர் அல்லது சிரேஸ்ட ஆசிரியர் ஒருவர் மேலதிக மண்டப் பொறுப்பாளராக நியமிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு்ளளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.