இந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கு 10,579 மாணவர்களை மேலதிகமாக இணைத்துக்கொள்வதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
மருத்துவ பீடத்திற்கு 481 மாணவர்களையும், பொறியியல் பீடத்திற்கு 565 மாணவர்களையும், தொழில்நுட்ப கல்வி பிரிவிற்கு 1,099 மாணவர்களையும் இணைத்துக்கொள்ளவுள்ளோம்.
அதேபோல், விவசாயம் மற்றும் வணிகப்பிரிவிற்கு 1,803 மாணவர்களையும், கலைப்பிரிவிற்கு 1,680 மாணவர்களையும், அழகியல் சார் கல்வி பிரிவிற்கு 318 மாணவர்களையும் மேலதிகமாக இணைத்துக்கொள்ள உள்ளோம் என்றார். (Thinakaran)