Meta நிறுவனம் வாட்ஸ்அப் பில் புதிய தனியுரிமை அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ரகசியமாக (அமைதியாக) Group Chat இருந்து வெளியேறவும், Online இல் இருப்பதை யார் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்தவும், ஒரு முறை மட்டுமே பார்க்கக்கூடிய செய்திகளின் Screen Shot எடுப்பதைத் தடுக்கவும் புதிய அம்சங்களை WhatsApp அறிமுகப்படுத்துகிறது.
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் கூறுகையில், இது வாட்ஸ்அப் செய்திகளை “நேருக்கு நேர் உரையாடல்களைப் போலவே பாதுகாப்பானதாகவும் தனிப்பட்டதாகவும்” மாற்றும் என்றார்.
ஐக்கிய இராஜ்ஜியத்தில் தொடங்கும் உலகளாவிய விளம்பர பிரச்சாரத்தில் சிறப்பம்சமாக இந்த அம்சங்கள் அறிமுகமாகி படிப்படியாக பயனர்களுக்கு வெளியிடப்படும் என்றார்.
குழுவிலிருந்து இரகசியமாக வெளியேறலாம்.
WhatsApp Group chat இலிருந்து வெளியேறுவதை அல்லது நீக்கப்படுவதை குழுவில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்வர்.
தற்போதைய வட்ஸ்அப்பில் பதிப்பில், இரகசியமாக வெளியேறும் வகையிலான செட்டிங்கள் இல்லை. இதன் மூலம் மோதல்கள், அல்லது சங்கடங்களை பயனர்கள் எதிர்கொண்டனர்.
புதிய அம்சங்களுடன், பயனர்கள் குழு அரட்டையை மற்ற பயனர்களுக்கு தெரிவிக்காமல் குழு நிர்வாகிக்கு Group Admin மட்டும் தெரிவிக்கும் வகையில் நீங்க முடியும்.
தயாரிப்புத் தலைவரான ஏமி வோரா, “தங்கள் உரையாடல்கள் மீது அதிகக் கட்டுப்பாட்டையும் தனியுரிமையையும் அடைய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் தயாரிப்பு அம்சங்களை வழங்குவதில் தங்கள் கவனம் உள்ளது” என்றார்.
“தனிப்பட்ட உரையாடல்களுக்கு WhatsApp பாதுகாப்பான இடம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
“வேறு எந்த உலகளாவிய செய்தியிடல் சேவையும் அவர்களின் பயனர்களின் செய்திகள், ஊடகங்கள், குரல் செய்திகள், வீடியோ அழைப்புகள் மற்றும் அரட்டை காப்புப்பிரதிகளுக்கு Chat back-ups இந்த அளவிலான பாதுகாப்பை வழங்கவில்லை.” என்றார்.
Online இல் இருப்பதை யார் பார்க்கலாம்
புதிய அப்டேட் மூலம், பயனர்கள் தாங்கள் Online இல் இருப்பதை யார் பார்க்கலாம் அல்லது முற்றிலும் தெரியாததாக மாற்றலாம் என்பதைத் தீர்மானிக்க முடியும். இதுவரை இது “Last seen” Settingsகு மட்டுமே இது வழங்கப்பட்டது.
அலன் டியுரிங் நிறுவனத்தின் ஆய்வுப் பங்காளியான ஜனிஸ் வோங் பிபிசியிடம் பின்வருமாறு கூறினார்: “பயனர்களுக்கு அதிக கட்டுப்பாட்டைக் கொடுப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது. பயனர்கள் அதை விரும்புகிறார்கள் மற்றும் பயனர்கள் அதிக கட்டுப்பாட்டிற்கு தகுதியானவர்கள்.
ஆனால் பயனர்கள் புதிய அம்சங்களைப் பயன்படுத்த உந்துதல் பெறவில்லை என்றால் அல்லது பயன்பாடு பற்றி முழுமையாகத் தெரிவிக்கவில்லை என்றால், அவற்றின் நன்மைகள் குறைவாக இருக்கலாம், என்று அவர் குறிப்பிட்டார்.
அதனை “default ஆகப் பெறவில்லை என்றால் அல்லது மிண்டும் செட்டிங்கை சரிபார்க்க வழங்கவில்லை என்றால் அதனால் அவர்களுக்குக் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில், இதுபோன்ற செயலைச் செய்ய முடியும் என்பது பயனர்களுக்குத் தெரியாது,” என்று அவர் கூறினார்.
ஒருமுறை பார்க்கக் கூடிய அம்சங்களை Screen shot எடுக்க முடியாது
புதிய அப்டேட் இன் படி, ஒரு முறை மாத்திரம் பார்க்கும் வகையில் பகிரப்படும் படங்கள், வீடியோக்களை Screen shot எடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.