அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளும் திங்கட்கிழமை 15 ஆம் திகதி முதல் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
போக்துவரத்து சிரமம் உள்ள பிரதேங்களில் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பாக பொருத்தமான போக்குவரத்து வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் வாரத்தில் தொடர்ந்தும் போக்குவரத்து சிரமம் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பாக பொருத்தமான நிவாரணம் அதிபரால் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, அந்த நிவாரணம் வழங்கப்படும் ஒழுங்கு தொடர்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்களை தெளிவூட்டுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அடுத்த மூன்று மாதக் காலப் பகுதியிகளிலும் கற்றல் கற்பித்தலுக்காக மாத்திரம் செலவிடுமாறும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை பாடசாலை நேரத்திற்குப் பின்னர், நடாத்தப்படாம் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.