பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ இன்று ஆரம்பித்து வைத்தார்.
இத்திட்டத்தின் அடையாளமாக, 2021 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த 06 புதிய மாணவர்களுக்கு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்திற்காக அரச வங்கி ரூ .33 பில்லியனை ஒதுக்கியுள்ளது.
இந்த லேப் டொப்பின் மதிப்பு இணைய இணைப்பு, மென்பொருள் தொகுப்பு மற்றும் 4 ஆண்டு உத்தரவாதத்துடன் ரூ .80,000 ஆகும்.
இந்த தொகையை, கல்வி நடவடிக்கை முடிவடைந்து தொழில் பெற்றதன் பின்னர் 6 வருடங்களுக்குள் மீளச் செலுத்தும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர் காலத்தில் மாதத்திற்கு 500 / – ரூபாய் செலுத்த வேண்டும்.