பெப்ரவரி 20 ஆம் திகதி ஆசிரியர்களின் சம்பளத்துடன் இடைக்கால கொடுப்பனவை அரசாங்கம் செலுத்தாவிட்டால் மார்ச் மாதத்தில் பாரிய வேலைநிறுத்தம் செய்ய அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்களும் முடிவு செய்துள்ளன.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது முன்வைக்கப்பட்ட முதல் பட்ஜெட்டில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஆசிரியர்களை மேலும் ஏமாற்ற அனுமதிக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
பெப்ரவரி சம்பளத்துடன் இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் மார்ச் மாதத்தில் பாரிய வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் தெரிவித்தார்.