கம்பாஹ மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 1031 பாடசாலைகளை 2021 பிப்ரவரி 15 முதல் மீண்டும் திறக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கம்பாஹா மாவட்டத்தில் 590 பாடசாலைகளில் 589 பாடசாலைகளும், களுத்தறை மாவட்டத்தில் 446 பாடசாலைகளில் 442 பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கொழும்பு மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.