மேல் மாகாணத்தில் மாணவர்கள் வருகை பரவாயில்லை மட்டத்தில் காணப்பட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் இன்று (25) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு மார்ச் மாதம் அமரவுள்ள மாணவர்களுக்காக ஆரம்பமாகின. அனைத்து கல்வி வலயங்கங்களில், மாதுகம கல்வி வலயத்தின் பாடசாலை மாணவர்களின் வருகை இன்று 65.5% ஆகக் காணப்பட்டதாக கல்வி அமைச்சு தரவுகள் தெரிவிக்கின்றன.
மேல் மாகாணத்தில் உள்ள பிற கல்வி வலயங்களில் உள்ள மாணவர்களின் வருகை சதவீதம் பின்வருமாறு காணப்பட்டது.
1. கொழும்பு 26.81%
2. ஹோமகம 51.72%
3. பிலியந்தல 40.81%
4. ஸ்ரீ ஜெயவர்தனபுர 36.81%
5. கம்பஹ 42.12%
6. நீர்கொழும்பு 52.43%
7. களனி 49.46%
8. மினுவங்கொட 56%
9. மாத்துகம 65.08%
10. ஹொரன 29.00%
11. களுத்துறை 61.49%
அனைத்து பாடசாலைகளும் சுகாதார பரிந்துரைகளுக்கு உட்பட்டே ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு அமரும் மாணவர்களின் தவறவிட்ட பாடங்களை உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தின் வெற்றிக்கு பெற்றோர் உட்பட அனைத்து தரப்பினரின் ஆதரவும் மிக முக்கியமானது எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.